பாகிஸ்தான் - ஆப்கானிஸ்தான் போர் நிறுத்தத்திற்கு இணக்கம்.!!

ஆப்கானிஸ்தான் மற்றும் பாகிஸ்தானுக்கு இடையில் உடன் அமுலாகும் வகையில் போர் நிறுத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
கட்டார் தோஹாவில் நடைபெற்ற அமைதிப் பேச்சுவார்த்தைகளுக்குப் பின்ன குறித்த இரண்டு நாடுகளும் போர் நிறுத்தத்திற்கு ஒப்புக் கொண்டதாக கட்டார் வௌிவிவகார அமைச்சு அறிவித்துள்ளது.
கட்டார் மற்றும் துருக்கியின் மத்தியஸ்தத்தில் சனிக்கிழமை நடைபெற்ற ஒரு சுற்று பேச்சுவார்த்தைகளின் போது இந்த ஒப்பந்தம் எட்டப்பட்டதாக கட்டார் வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.
2021 ஆம் ஆண்டில் ஆப்கானிஸ்தானில் தலிபான்கள் ஆட்சிக்கு வந்ததிலிருந்து இரு அண்டை நாடுகளுக்கும் இடையேயான மோதல் இடம்பெற்று வந்த நிலையில், கடந்த வாரத்தில் அது மேலும் மோசமடைந்தது.
இந்த புதிய மோதலில் பலர் உயிரிழந்த நிலையில் நூற்றுக்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.
"போர்நிறுத்தத்தின் நிலைத்தன்மையை உறுதி செய்வதற்கும் அதன் செயல்படுத்தலை நம்பகமான மற்றும் நிலையான முறையில் சரிபார்க்கவும்" இரு தரப்பினரும் தொடர்ச்சியான கூட்டங்களை நடத்த உறுதிபூண்டுள்ளனர் என்று அந்த அறிக்கையில் மேலும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
(வீடியோ இங்கே )
அனுசரணை



