இலங்கை ஒரே நாளில் மேற்கொள்ளப்பட்ட விசேட சுற்றிவளைப்பில் 4601 பேர் கைது !

#SriLanka #Police #Sri Lankan Army #ADDA #shelvazug #ADDAADS #SHELVA #SHELVAFLY #ADDAFLY #ADDAPOOJA
Abi
2 months ago
இலங்கை  ஒரே நாளில் மேற்கொள்ளப்பட்ட விசேட சுற்றிவளைப்பில் 4601 பேர் கைது !

இலங்கையில் ஒரே நாளில் மேற்கொள்ளப்பட்ட விசேட சுற்றிவளைப்பு நடவடிக்கையின் போது 4 ஆயிரத்து 601 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். 

என்று பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது. பொலிஸ் அதிகாரிகள், இராணுவத்தினர், பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் மற்றும் கடற்படையினர் ஆகியோர் இணைந்து நேற்று (18) இந்தச் சுற்றிவளைப்பு நடவடிக்கையை மேற்கொண்டுள்ளனர்.

இதன்போது பல்வேறு குற்றச் செயல்களுடன் தொடர்பில் 24 பேரும், சந்தேகத்தின் பேரில் 654 பேரும், பிடியாணை உத்தரவு பிறப்பிக்கப்பட்ட 303 பேரும், திறந்த பிடியாணை உத்தரவு பிறப்பிக்கப்பட்ட 141 பேரும், மதுபோதையில் வாகனங்களைச் செலுத்தியமை தொடர்பில் 11 சாரதிகளும், கவனக்குறைவாக வாகனங்களை செலுத்தியமை தொடர்பில் 11 சாரதிகளும், ஏனைய போக்குவரத்து விதிமுறைகளை மீறியமை தொடர்பில் 3 ஆயிரத்து 451 பேரும் கைது செய்யப்பட்டுள்ளனர் என்று பொலிஸ் ஊடகப் பிரிவு மேலும் குறிப்பிட்டுள்ளது.

லங்கா4 (Lanka4)

(வீடியோ இங்கே )

அனுசரணை

images/content-image/1754511373.jpg

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!