பிரான்ஸில் புதிய பிரதமரை நியமிக்க நடவடிக்கைகள் ஆரம்பம்
பிரான்ஸில் 48 மணிநேரத்தில் புதிய பிரதமர் ஒருவர் நியமிக்கப்படவுள்ளதாக அந்நாட்டின் ஜனாதிபதி அலுவலகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.
வரவு செலவு திட்டத்தில் முன்வைக்கப்பட்ட சில திட்டங்களுக்கு எதிர்கட்சிகள் மத்தியிலும், மக்கள் மத்தியிலும் கடும் விமர்சனங்களை எதிர்கொண்ட செபஸ்டியன் லெகோர்னு (Sébastien Lecornu) தனது பதவியை இராஜினாமா செய்துள்ளார்.
இதனைத் தொடர்ந்து வரவு செலவு திட்டத்தை சமர்ப்பிக்கவும், அரசியல் ஸ்திரத்தன்மையை ஏற்படுத்தவும் விரைவில் புதிய பிரதமரை நியமிக்கவேண்டிய கட்டாயம் மக்ரோனுக்கு உள்ளது.
இதற்கிடையே பெரும்பான்மையான பிரதிநிதிகள் நாடாளுமன்றம் கலைக்கப்படுவதை எதிர்க்கின்றனர். இந்த சூழ்நிலையிலேயே புதிய பிரதமரை 48 மணிநேரத்தில் நியமிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி அலுவலகம் குறிப்பிட்டுள்ளது.

------------------------------------------------------------------------------------
A new prime minister will be appointed in 48 hours in France, the country's presidential office said in a statement.
Sébastien Lecornu has resigned from his post after facing strong criticism from the opposition and the public for some of the proposals presented in the budget.
Following this, Macron is forced to appoint a new prime minister soon in order to present the budget and establish political stability.
Meanwhile, the majority of representatives are opposed to the dissolution of parliament. In this situation, the presidential office stated that steps have been taken to appoint a new prime minister within 48 hours.

------------------------------------------------------------------------------------
ප්රංශයේ පැය 48 කින් නව අගමැතිවරයෙකු පත් කරන බව එරට ජනාධිපති කාර්යාලය නිවේදනයක් නිකුත් කරමින් කියා සිටියේය.
අයවැයෙන් ඉදිරිපත් කරන ලද යෝජනා කිහිපයක් සම්බන්ධයෙන් විපක්ෂයෙන් සහ මහජනතාවගෙන් දැඩි විවේචන එල්ල වීමෙන් පසු සෙබස්තියන් ලෙකෝර්නු සිය ධුරයෙන් ඉල්ලා අස්වී තිබේ.
මෙයින් පසු, අයවැය ඉදිරිපත් කිරීම සහ දේශපාලන ස්ථාවරත්වය ස්ථාපිත කිරීම සඳහා ඉක්මනින් නව අගමැතිවරයෙකු පත් කිරීමට මැක්රොන්ට බල කෙරෙයි.
මේ අතර, බහුතර නියෝජිතයින් පාර්ලිමේන්තුව විසුරුවා හැරීමට විරුද්ධ වේ. මෙම තත්ත්වය තුළ, පැය 48 ක් ඇතුළත නව අගමැතිවරයෙකු පත් කිරීමට පියවර ගෙන ඇති බව ජනාධිපති කාර්යාලය ප්රකාශ කළේය.
(வீடியோ இங்கே )