ஈரானில் அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் 787 பேர் மரணம்

#Death #America #Attack #Israel #Middle East #L4
Prasu
3 months ago
ஈரானில் அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் 787 பேர் மரணம்

ஈரான் மீது இஸ்ரேல் மற்றும் அமெரிக்கா கடந்த 28ம் திகதி தாக்குதல் நடத்தியன. ஈரானின் அணு சக்தி மையங்கள், அணு சக்தி உள்கட்டமைப்புகள், ராணுவ தளங்கள் என பல்வேறு பகுதிகளை குறிவைத்து தாக்குதல் நடத்தப்பட்டது.

இந்த தாக்குதலில் ஈரான் உச்ச தலைவர் அயதுல்லா அலி கமேனி அவரது குடும்பத்தினர், ஈரான் பாதுகாப்புத்துறை மந்திரி அமீர், ஈரான் புரட்சிப்படை தளபதி முகமது உள்பட பலர் கொல்லப்பட்டனர்.

இந்நிலையில், அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் நடத்திய வான்வழி தாக்குதலில் 787 பேர் உயிரிழந்துள்ளதாக ஈரான் செஞ்சிலுவை சங்கம் தெரிவித்துள்ளது.

ஈரானின் 153 நகரங்களில் 504 இலக்குகளை குறிவைத்து 1 ஆயிரத்து 39 முறை தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுளது.

லங்கா4 (Lanka4)

(வீடியோ இங்கே )

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4