என்.பி.பி அரசாங்கம் ஆயிரம் மடங்கு சிறந்தது! பொன்சேகா புகழாரம்

#SriLanka #Mahinda Rajapaksa #Sarath Fonseka #Lanka4 #NPP
Mayoorikka
1 week ago
என்.பி.பி அரசாங்கம் ஆயிரம் மடங்கு சிறந்தது! பொன்சேகா புகழாரம்

கடந்த கால அரசாங்கங்களை விட தற்போதை அரசாஙம் ஆயிரம் மடங்கு சிறந்தது என பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார்.

 ஊழல் செய்பவர்களைப் பாதுகாக்காமல் இருக்க தற்போதைய அரசாங்கம் முதுகெலும்பாக இருப்பதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். நேற்று இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு பேசிய அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

 ராஜபக்சக்கள் ஊழல் வலையமைப்பை சர்வதேச மட்டத்திற்கு கொண்டு சென்று கட்டுப்படுத்தி வருவதாகவும், இதன் விளைவாக, நாட்டில் ஊழல் எல்லைகளை உடைத்துள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டினார். சிறிய குறைபாடுகள் இருந்தபோதிலும், இந்த அரசாங்கம் முந்தைய அரசாங்கங்களை விட ஆயிரம் மடங்கு சிறந்தது என்று நான் முழு மனதுடன் கூறுகிறேன்.

 ஊழல் செய்பவர்களைப் பாதுகாக்காமல் இருக்க இந்த அரசாங்கம் முதுகெலும்பாக இருப்பதால், முந்தைய எந்தவொரு அரசாங்கத்தையும் விட தற்போதைய அரசாங்கம் சிறந்தது. ஒரு திருடன் கடந்த காலத்தில் ஏதேனும் குற்றம் செய்திருந்தால், அவனிடம் பணம் இருந்தால், அவனிடம் குண்டர் சக்தி இருந்தால், பின் கதவு வழியாக அதிலிருந்து தப்பிக்க முடியும். 

எந்தவொரு மோசடியிலிருந்தும் அவன் தப்பிக்க முடியும். எனினும், மோசடி செய்பவர்கள் பின் கதவு வழியாக தப்பிக்கும் வாய்ப்பை இந்த அரசாங்கம் குறைந்தபட்சம் தடுத்து நிறுத்தியுள்ளது. சட்டத்தை செயல்படுத்தவும் தற்போதைய அரசாங்கம் முயற்சிக்கின்றது. இது நூறு வீதம் வெற்றிபெறவில்லை என்றாலும், முந்தைய அரசாங்கங்களை விட ஆயிரம் மடங்கு சிறந்தது என்று நான் அச்சமின்றி சொல்ல முடியும். இந்த ஊழல் வலையமைப்பை இந்த நாட்டில் ராஜபக்சேக்கள் சர்வதேச அளவில் முன்னெடுத்துச் சென்று கட்டுப்படுத்தி வருகின்றனர்.

 சகோதரர்கள், சகோதரிகள், தந்தைகள், மாமாக்கள் மற்றும் மகன்கள் அனைவரும் ஒன்றிணைந்து இந்த ஊழல் வலையமைப்பை முழுமையாகக் கட்டுப்படுத்துகிறார்கள். அதனால்தான் இந்த நாட்டில் ஊழல் வேலிகளை உடைத்தெறிந்துள்ளது என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

லங்கா4 (Lanka4)

(வீடியோ இங்கே )

அனுசரணை

images/content-image/1754511373.jpg


உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!