புலம்பெயர்ந்த தமிழ் மக்கள் எனக்கு உதவத் தயாராக உள்ளனர் - அர்ச்சுனா!

தமிழ் மக்களின் இனப் பிரச்சினைக்கு சர்வதேச சமூகம் ஒருபோதும் உதவாது என்று நாடாளுமன்ற உறுப்பினர் ராமநாதன் அர்ச்சுனா கூறினார்.
தனியார் ஊடகம் ஒன்றுக்கு அளித்த பேட்டியில் அவர் இவ்வாறு கூறியுள்ளார். ஸ
இதன்போது மேலும் கருத்து வெளியிட்ட அவர், சர்வதேச சமூகம் ஒரு தீர்வைக் கண்டுபிடிக்கும் என்று தனக்கு அதிக நம்பிக்கை இல்லை என்றும், ஆனால் தமிழ் மக்களின் இனப் பிரச்சினைக்கு ஆலோசனை மற்றும் தீர்வை வழங்க முயற்சிக்கும் எந்தவொரு அரசாங்கத்தையும் ஆதரிக்கத் தயாராக இருப்பதாகவும் அர்ச்சுனா கூறினார்.
புலம்பெயர்ந்த தமிழ் மக்கள் எனக்கு உதவத் தயாராக உள்ளனர். ஒரு அரசியல்வாதியின் வேலை நாடுகளுக்கு இடையே நல்லிணக்கத்தை உருவாக்குவதாகும். மேலும், நாட்டின் தமிழ், சிங்கள மற்றும் முஸ்லிம் மக்கள் ஒன்றாக வாழக்கூடிய வகையில் ஒரு உண்மையான தமிழ் பிரதிநிதியாக எனது கடமையை நிறைவேற்ற விரும்புகிறேன்.
வடக்கு மாகாணம் இப்போது சமூக ரீதியாக சீரழிந்துள்ளது. 2009 முதல் தமிழ் மக்களின் கலாச்சாரம் மோசமடைந்துள்ளது, ”என்று அவர் கூறியுள்ளார்”
(வீடியோ இங்கே )
அனுசரணை



