இடைதரகர்கள் இல்லாமல் மலையக மக்களிடம் இருந்து நேரடியாக உருளைக்கிழங்குகளை வாங்க அரசாங்கம் முடிவு!
#SriLanka
#Potato
#ADDA
#ADDAADS
#ADDAFLY
#ADDAPOOJA
Thamilini
1 week ago

மலையக உருளைக்கிழங்கு விவசாயிகளின் அறுவடை வீணாவதைத் தடுக்க, ஒவ்வொரு விவசாயியிடமிருந்தும் 20 கிலோகிராம் உருளைக்கிழங்கை வாங்க அரசாங்கம் முடிவு செய்துள்ளதாக பெருந்தோட்டக் கைத்தொழில் அமைச்சர் சர்மந்த வித்யாரத்ன தெரிவித்தார்.
மலையக உருளைக்கிழங்கு அறுவடை தற்போது தொடங்கியுள்ளதாகவும், விலை வீழ்ச்சியால் விவசாயிகள் சிரமங்களை எதிர்கொண்டுள்ளதாகவும், இதைத் தடுக்க வர்த்தக அமைச்சர் வசந்த சமரசிங்கவுடன் கலந்துரையாடிய பின்னர் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் தெரிவித்தார்.
இடைத்தரகர்கள் இல்லாமல் ஒரு கிலோவிற்கு ரூ.210க்கு உருளைக்கிழங்கை வாங்க அரசாங்கம் முடிவு செய்துள்ளது. இந்த உருளைக்கிழங்கு அறுவடை சதொச மற்றும் கார்கில்ஸ் ஃபுட் சிட்டி மூலம் நாடு முழுவதும் விற்பனை செய்யப்படும்.
(வீடியோ இங்கே )
அனுசரணை



