மக்களிடம் தனக்குள்ள பிணைப்பை உடைப்பது கடினம் - மஹிந்த!

நம்பிக்கை மற்றும் பரஸ்பர மரியாதையை அடிப்படையாகக் கொண்ட மக்களின் அன்பு, லாப நோக்கங்களிலிருந்து விடுபட்டது என்று முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ கூறுகிறார்.
தனது பேஸ்புக் கணக்கில் இட்டுள்ள பதிவொன்றில் அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
குறித்த பதிவில் மேலும் தெரிவித்துள்ள அவர், தனது வாழ்க்கையின் பெரும்பகுதியை மக்களிடையே கழித்ததாகவும், மக்களின் அன்பை நன்கு அறிந்திருப்பதாகவும் கூறியுள்ளார்.
இந்த அன்பின் மதிப்பு முன்னெப்போதையும் விட உயர்ந்தது என்றும், இது ஒரு அரசியல் உறவுக்கு மட்டுப்படுத்தப்படாத ஒரு இதயப்பூர்வமான பிணைப்பு என்றும், அதை உடைப்பது கடினம் என்றும் அந்தப் பதிவில் குறிப்பிடப்பட்டுள்ளது.
அந்தப் பிணைப்பை உடைப்பதற்கான முயற்சிகள் அதை இன்னும் பலப்படுத்தும் என்று சுட்டிக்காட்டிய முன்னாள் ஜனாதிபதி, மக்களுடன் செலவிடும் இந்த நேரத்தில் ஒரு தலைவராக தான் பெறக்கூடிய மிகப்பெரிய மகிழ்ச்சியை அனுபவிப்பதாக தனது பதிவில் மேலும் கூறினார்.
(வீடியோ இங்கே )
அனுசரணை



