நாரம்மல-குருணேகல பகுதியில் கோர விபத்து - மூவர் பலி!

நாரம்மல-குருணேகல சாலையில் நாரம்மல நகருக்கு அருகில் இன்று (05) காலை நடந்த கோர விபத்தில் மூன்று பேர் உயிரிழந்துள்ளனர்.
குருநாகலிலிருந்து நாரம்மல நோக்கிச் சென்ற வொறி கட்டுப்பாட்டை இழந்து சாலையின் வலதுபுறம் விலகி, கட்டுநாயக்காவிலிருந்து அக்கரைப்பற்று நோக்கிச் சென்ற இலங்கை போக்குவரத்துக் கழகத்தின் (SLTC) பேருந்து மீது மோதியதில் இந்த விபத்து நிகழ்ந்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.
இந்த விபத்தில் லொறியின் சாரதி, ஒரு ஆண், இரண்டு பெண்கள் மற்றும் இரண்டு குழந்தைகள் காயமடைந்து நாரம்மல மற்றும் குருநாகல் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டனர்.
அவர்களில் லொறியின் சாரதி, ஒரு ஆண், ஒரு பெண் என மூவர் உயிரிழந்துள்ளதுடன், 40 வயதுடைய பெண் மெற்றும் 16 மற்றும் 09 வயதுடைய இருவர் சிகிச்சைப்பெற்று வருகின்றனர்.
இந்த சம்பவம் குறித்த மேலதிக விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.
(வீடியோ இங்கே )
அனுசரணை



