விமல் வீரவன்சவிற்கு எதிராக சட்ட நடவடிக்கை! அரசாங்கம் தயார்

#SriLanka #Wimal Weerawansa #Lanka4
Mayoorikka
1 month ago
விமல் வீரவன்சவிற்கு எதிராக சட்ட நடவடிக்கை! அரசாங்கம் தயார்

முன்னாள் அமைச்சர் விமல் வீரவன்சவிற்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்பட உள்ளதாக தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் தெரிவித்துள்ளது. 

பிரதி அமைச்சர் ருவான் செனரத் குறிப்பிட்டுள்ளார். ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க குற்றச் செயல்களுடன் தொடர்புடைய ஒருவருடன் தொடர்பு பேணியதாக விமல் வீரவன்ச குற்றம் சுமத்தியிருந்தார். இந்தக் குற்றச்சாட்டு குறித்து பிரதி அமைச்சர் விளக்கமளித்துள்ளார்.

 ஜனாதிபதி அநுர அண்மையில் தென் மாகாணத்திற்கு விஜயம் செய்திருந்த போது புவக்தன்டாவே சனா என்ற நபரின் வீட்டுக்கு சென்றதாகவும் அங்கு உணவு உட்கொண்தாகவும் விமல் வீரவன்ச தெரிவித்தார்.

 பாரிய போதைப் பொருள் கடத்தல் விவகாரம் தொடர்பில் குறித்த சனா என்ற நபர் கைது செய்யப்பட்டுள்ளார். 

இந்த நிலையில் விமல் வீரவன்சவின் குற்றச்சாட்டு அடிப்படையற்றது எனபிரதி அமைச்சர் ருவான் செனரத் தெரிவித்துள்ளார்.

 மக்களை திசை திருப்பும் வகையிலும் போலியானதுமான தகவல்களை வெளியிட்டமைக்காக விமல் வீரவன்சவிற்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என அவர் தெரிவித்துள்ளார்.

லங்கா4 (Lanka4)

(வீடியோ இங்கே )

அனுசரணை

images/content-image/1754511373.jpg


உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
சிறப்பு கட்டுரை