இளஞ்சிவப்பு வர்ணத்தில் தோன்றிய பிரான்சின் ஈபிள் கோபுரம்
‘பிங் ஒக்டோபர்’ என கருதப்படும் இந்த மாதம் ஈஃபிள் கோபுரம் இளஞ்சிவப்பு நிறத்தில் ஒளிரவிடப்பட்டது.
”மார்பக புற்றுநோய்” தொடர்பான விழிப்புணர்வு நோக்கத்துடன் ஈஃபிள் கோபுரம் இவ்வாறு ஒளிரவிடப்பட்டது.
ஒவ்வொரு ஆண்டும் இந்த நடைமுறை பின்பற்றப்படுகிறது. சென்ற ஆண்டு பாராளுமன்றம் உள்ளிட்ட பல கட்டிடங்களில் இளஞ்சிவப்பு நிறம் ஒளிரவிடப்பட்டு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.
பிரான்சில் வருடத்துக்கு 10,000 இற்கும் மேற்பட்டோர் மார்பக புற்றுநோயினால் உயிரிழக்கின்றனர். 2022 ஆம் ஆண்டில் 65,659 பேருக்கு மார்பக புற்றுநோய் அடையாளம் காணப்பட்டது. அத்தோடு அவ்வருடத்தில் 14,739 பேர் உயிரிழந்திருந்தனர்.
சுகாதார காப்பீடு திட்டத்தில் 50 தொடக்கம் 74 வயது வரையுள்ள ஒவ்வொரு பெண்களுக்கும் மார்பக புற்றுநோய் பரிசோதனை ஒவ்வொரு இரண்டு ஆண்டுகளுக்கும் ஒருமுறை இடம்பெறுகிறமை குறிப்பிடத்தக்கது.

------------------------------------------------------------------------------------
This month, known as 'Pink October', the Eiffel Tower was lit up in pink.
The Eiffel Tower was lit up in this way to raise awareness about "breast cancer".
This practice is followed every year. Last year, many buildings, including the Parliament, were lit up in pink to raise awareness.
More than 10,000 people die from breast cancer in France every year. In 2022, 65,659 people were diagnosed with breast cancer. In addition, 14,739 people died that year.
It is noteworthy that every woman aged 50 to 74 is screened for breast cancer every two years under the health insurance scheme.

------------------------------------------------------------------------------------
'රෝස ඔක්තෝබර්' ලෙස හඳුන්වන මේ මාසයේ අයිෆල් කුළුණ රෝස පැහැයෙන් ආලෝකමත් විය.
"පියයුරු පිළිකා" පිළිබඳ දැනුවත් කිරීම සඳහා අයිෆල් කුළුණ මේ ආකාරයෙන් ආලෝකමත් කරන ලදී.
මෙම පිළිවෙත සෑම වසරකම අනුගමනය කරනු ලැබේ. පසුගිය වසරේ, පාර්ලිමේන්තුව ඇතුළු බොහෝ ගොඩනැගිලි දැනුවත් කිරීම සඳහා රෝස පැහැයෙන් ආලෝකමත් කරන ලදී.
ප්රංශයේ සෑම වසරකම පියයුරු පිළිකාවෙන් 10,000 කට වැඩි පිරිසක් මිය යති. 2022 දී පියයුරු පිළිකා ඇති බවට හඳුනාගෙන ඇති පුද්ගලයින් 65,659 ක් සිටියහ. ඊට අමතරව, එම වසරේ පුද්ගලයින් 14,739 ක් මිය ගියහ.
සෞඛ්ය රක්ෂණ ක්රමය යටතේ වයස අවුරුදු 50 ත් 74 ත් අතර සෑම කාන්තාවක්ම සෑම වසර දෙකකට වරක් පියයුරු පිළිකා සඳහා පරීක්ෂාවට ලක් කිරීම සැලකිය යුතු කරුණකි.
(வீடியோ இங்கே )