கட்டுநாயக்க விமான நிலையத்தில் மின் சிகரெட்டுகளுடன் நால்வர் கைது!
கட்டுநாயக்கவில் உள்ள பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் (BIA) இலங்கை சுங்க அதிகாரிகளால் ரூ.9.5 மில்லியனுக்கும் அதிகமான மதிப்புள்ள வெளிநாட்டு சிகரெட்டுகள், அழகுசாதனப் பொருட்கள் மற்றும் மின்-சிகரெட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
செவ்வாய்க்கிழமை (30) துபாயிலிருந்து EK 652 மற்றும் EK 654 விமானங்களில் வந்தடைந்த 23 முதல் 25 வயதுக்குட்பட்ட நான்கு இலங்கை பயணிகள் தடுத்து நிறுத்தப்பட்டு சோதனைக்கு உட்படுத்தப்போட்டு மின் சிகரெட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டு அவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்ட நபர்கள் கல்முனை, சாய்ந்தமருது மற்றும் கொழும்பில் வசிப்பவர்கள் என அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
அதிகாரிகள் ரூ.8.76 மில்லியன் மதிப்புள்ள 292 அட்டைப் பெட்டி, வெளிநாட்டு சிகரெட்டுகள், ரூ.450,000 மதிப்புள்ள அழகுசாதனப் பொருட்கள் மற்றும் ரூ.300,000 மதிப்புள்ள மின்-சிகரெட்டுகள் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.
பறிமுதல் செய்யப்பட்ட சிகரெட்டுகளின் மதிப்பிடப்பட்ட தெரு மதிப்பு மட்டும் தோராயமாக ரூ.8.7 மில்லியன் என்று சுங்க அதிகாரிகள் தெரிவித்தனர்.
 கைது செய்யப்பட்ட நான்கு பயணிகள் மீதும் 750,000 ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது, மேலும் விசாரணைகள் நடந்து வருகின்றன.
(வீடியோ இங்கே )
அனுசரணை
                        
                    
                        
                    
                        
                    
                        
                    
                
                
                
                
                
                                    