இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகுவின் நிலை குறித்து வெளியான பரபரப்பு தகவல்கள்

#PrimeMinister #Death #Attack #Israel #Iran #L4
Prasu
3 months ago
இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகுவின் நிலை குறித்து வெளியான பரபரப்பு தகவல்கள்

இஸ்ரேல் பிரதமர் இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு அவர்களின் இருப்பிடம் மற்றும் உடல்நிலை குறித்து ஈரானிய ஊடகங்கள் பல்வேறு அதிர்ச்சி தகவல்களை வெளியிட்டு வருகின்றன.

ஈரானின் ஏவுகணை மற்றும் ட்ரோன் தாக்குதல்களின் பின்னணியில், நெதன்யாகு காயமடைந்திருக்கலாம் அல்லது கொல்லப்பட்டிருக்கலாம் என்ற சந்தேகத்தை ஈரான் தரப்பு முன்வைத்துள்ளது. குறிப்பாக Tasnim News Agency இந்த தகவலை வெளியிட்டதாக தெரிவிக்கப்படுகிறது. 

மேலும், சமீப நாட்களாக நெதன்யாகு பொது நிகழ்ச்சிகளில் தோன்றாதது, அவரது இல்லம் சுற்றி பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டிருப்பது மற்றும் திட்டமிடப்பட்டிருந்த சில முக்கிய இராஜதந்திர சந்திப்புகள் ஒத்திவைக்கப்பட்டிருப்பது போன்ற காரணங்களால் இந்த யூகங்கள் அதிகரித்துள்ளன. 

இதற்கிடையில், அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் அவர்களின் தூதருடன் நடைபெறவிருந்த முக்கிய சந்திப்பு கூட ரத்து செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. 

இது இஸ்ரேல் தரப்பில் ஏதோ அசாதாரண சூழ்நிலை நிலவுவதாக ஈரான் தரப்பு வாதிடுகிறது. ஆனால், இந்த தகவல்கள் குறித்து இஸ்ரேல் தரப்பிலிருந்து இதுவரை அதிகாரப்பூர்வமான உறுதிப்படுத்தல் வெளியாகவில்லை. 

ஈரான் – இஸ்ரேல் இடையேயான பதற்றம் உச்சக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில், இந்த செய்தி மத்திய கிழக்கு அரசியல் சூழலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

லங்கா4 (Lanka4)

(வீடியோ இங்கே )

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4