நவம்பர் 1 முதல் முக்கிய தேவைகளுக்கு வரி செலுத்துநர் அடையாள இலக்கச் சான்றிதழ் கட்டாயம்

#SriLanka #LANKA4 #certificate #ADDA #ADDAADS #SHELVA #ADDAFLY #ADDAPOOJA
Riya
1 hour ago
நவம்பர் 1 முதல் முக்கிய தேவைகளுக்கு வரி செலுத்துநர் அடையாள இலக்கச் சான்றிதழ் கட்டாயம்

எதிர்வரும் நவம்பர் 1ஆம் திகதி முதல் பல்வேறு முக்கிய தேவைகளுக்காகச் செல்லுபடியாகும் வரி செலுத்துநர் அடையாள இலக்கச் சான்றிதழை (TIN) சமர்ப்பிப்பது கட்டாயமாக்கப்பட்டுள்ளதாக உள்நாட்டு இறைவரித் திணைக்களம் அறிவித்துள்ளது.

2026ஆம் ஆண்டின் 11ஆம் இலக்க உள்நாட்டு இறைவரி (திருத்தச்) சட்டத்தின் கீழ் இந்தப் புதிய விதிகள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன.

அதன்படி, வங்கிக் கணக்குகளைத் திறத்தல், வாகனங்களைப் பதிவு செய்தல் அல்லது உரிமங்களைப் புதுப்பித்தல், காணி அல்லது வணிகங்களைப் பதிவு செய்தல், கட்டிடத் திட்டங்களுக்கு அனுமதி பெறுதல், பங்குகளைப் பரிமாற்றம் செய்தல் மற்றும் கடனட்டைகளுக்கு விண்ணப்பித்தல் உள்ளிட்ட பல்வேறு தேவைகளுக்கு செல்லுபடியாகும் வரி செலுத்துநர் அடையாள இலக்கச் சான்றிதழ் கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

2023 டிசம்பர் 31ஆம் திகதியன்று அல்லது அதற்கு முன்னர் 18 வயதைப் பூர்த்தி செய்தவர்கள் மற்றும் 2024 ஜனவரி 1ஆம் திகதி அல்லது அதற்குப் பின்னர் 18 வயதைப் பூர்த்தி செய்பவர்கள் அனைவரும் வரி செலுத்துநர் அடையாள இலக்கச் சான்றிதழைப் பெறுவது கட்டாயமாகும்.

இதுவரை பதிவு செய்யாதவர்கள், உள்நாட்டு இறைவரித் திணைக்களத்தின் உத்தியோகபூர்வ இணையத்தளத்தின் ஊடாகப் பதிவு செய்து வரி செலுத்துநர் அடையாள இலக்கச் சான்றிதழைப் பெற்றுக்கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

 மேலும், இணையவழியில் சரிபார்க்கப்பட்ட முடிவின் அச்சுப் பிரதியையும் உத்தியோகபூர்வ சான்றிதழுக்குப் பதிலாகப் பயன்படுத்த முடியும் என உள்நாட்டு இறைவரித் திணைக்களம் தெரிவித்துள்ளது.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
llow="accelerometer; autoplay; clipboard-write; encrypted-media; gyroscope; picture-in-picture; web-share" referrerpolicy="strict-origin-when-cross-origin" allowfullscreen>-media; gyroscope; picture-in-picture; web-share" referrerpolicy="strict-origin-when-cross-origin" allowfullscreen>