நடிகர் சூர்யா மற்றும் ஜோதிகா தம்பதிக்கு மீண்டும் திருமணம்
#Actor
#Actress
#TamilCinema
#wedding
#LANKA4
#couple
#L4
Prasu
1 day ago
தமிழ் சினிமாவின் நட்சத்திர ஜோடிகளில் முக்கியமானவர்களாக இருப்பவர்கள் சூர்யா மற்றும் ஜோதிகா தம்பதி.
இவர்கள் 2006ம் ஆண்டு காதலித்து திருமணம் செய்து கொண்டார்கள். இவர்கள் சினிமாவைக் கடந்து தனிப்பட்ட வாழ்க்கையிலும் ரசிகர்கள் மத்தியில் முன்மாதிரி தம்பதியாக திகழ்கின்றனர்.
நட்சத்திர தம்பதியர்களான சூர்யா- ஜோதிகா ஜோடி திருமண வாழ்வில் 20 ஆண்டுகளை நிறைவு செய்துள்ளனர்.
அந்தவகையில், இந்த தம்பதி கடந்த 11ம் திகதி தங்களது 20வது திருமண நாளைக் கொண்டாடினர்.
அதன் ஒரு பகுதியாக இருவரும் மகள், மகன் முன்னிலையில் கிறிஸ்தவ முறைப்படி மீண்டும் திருமணம் செய்து கொண்டனர்.
வெளிநாட்டில் நடைபெற்ற இந்த திருமணத்தில் நடிகர் கார்த்தி உள்ளிட்ட நெருங்கிய நண்பர்கள் கலந்து கொண்டனர்.