சொக்லேட்களை திருடிய தாயையும் 2 மாத குழந்தையையும் விளக்க மறியலில் வைக்க உத்தரவு!
                                                        #SriLanka
                                                        #Court Order
                                                        #Lanka4
                                                    
                                            
                                    Mayoorikka
                                    
                            
                                        1 month ago
                                    
                                மாத்தறையில் உள்ள கடையொன்றில் சொக்லட்களை திருடியதற்காக தாயும் அவரது 2 மாத குழந்தையும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.
இச் சம்பவம் நேற்று இடம்பெற்றுள்ளது. 26 வயதுடைய பெண்ணும் 2 மாதக் குழந்தையும் நேற்று கந்தர பொலிஸாரால் கைது செய்யப்பட்டு மாத்தறை தலைமை நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டனர்.
இதன்போது சந்தேக நபர்கள் சார்பாக முன்னிலையான வழக்கறிஞர் சமீர மீகந்தவத்த, இளம் தாய் விளக்கமறியலில் வைக்கப்பட்டால், அது குழந்தைக்கு அநீதியாக இருக்கும் என குறிப்பிட்டுள்ளார்.
 எனினும் மாத்தறை தலைமை நீதவான் சதுர திசாநாயக்க பிணை வழங்க  மறுத்துள்ளதுடன் விளக்கமறியலில் வைக்க உத்தரவிட்டுள்ளார்.
(வீடியோ இங்கே )
அனுசரணை
                        
                    
                        
                    
                        
                    
                        
                    
                
                
                
                
                
                                    