லெபனானில் இஸ்ரேல் நடத்திய தாக்குதல்களில் 83 குழந்தைகள் மரணம் - யுனிசெப் அறிக்கை

#Death #children #Attack #Israel #War #Lebanon #L4
Prasu
3 months ago
லெபனானில் இஸ்ரேல் நடத்திய தாக்குதல்களில் 83 குழந்தைகள் மரணம் - யுனிசெப் அறிக்கை

ஈரான் மீதான இஸ்ரேல் - அமெரிக்கா தாக்குதல் கடந்த 8 நாட்களாக நீடித்து வரும் நிலையில், லெபனான் மீதும் இஸ்ரேல் தாக்குதல் நடத்தி வருகிறது.

இந்நிலையில் ஐநாவின் குழந்தைகள் நல அமைப்பான யுனிசெப் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.

அதில், லெபனானில் கடந்த மார்ச் 2 முதல் இஸ்ரேல் தாக்குதலில் கடந்த ஒரு வாரத்தில் குறைந்தது 83 குழந்தைகள் கொல்லப்பட்டுள்ளனர் மற்றும் 254 குழந்தைகள் காயமடைந்துள்ளனர் என்று யுனிசெப் தெரிவித்துள்ளது.

மேலும் அந்த அறிக்கையில், "தாக்குதல்களில் லெபனான் முழுவதும் தினமும் சராசரியாக 10 க்கும் மேற்பட்ட குழந்தைகள் உயிரிழக்கின்றனர், மேலும் 36 குழந்தைகள் காயமடைகின்றனர்.

கடந்த 28 மாதங்களில் இஸ்ரேல் ஒட்டுமொத்தமாக லெபனானில் 329 குழந்தைகள் உயிரிழந்துள்ளனர், 1,632 குழந்தைகள் காயமடைந்துள்ளனர்.

தற்போது நடந்து வரும் போர் குழந்தைகளின் மீது எந்தளவுக்குகொடூரமான தாக்கத்தை ஏற்படுத்துகிறது என்பதற்கு இதுவே நேரடிச் சாட்சியாகும்" என்று யுனிசெப் கவலை தெரிவித்துள்ளது.

லங்கா4 (Lanka4)

(வீடியோ இங்கே )

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4