சிதைக்கப்பட்டு புதைக்கப்பட்ட குழந்தைகள் - செம்மணி தொடரும் மர்மம் (வீடியோ இணைப்பு)

#SriLanka #Jaffna #Protest #Lanka4 #SHELVAFLY
Mayoorikka
1 month ago
சிதைக்கப்பட்டு புதைக்கப்பட்ட குழந்தைகள் - செம்மணி தொடரும் மர்மம் (வீடியோ இணைப்பு)

வடக்கு கிழக்கு வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களின் சங்கத்தின் ஏற்பாட்டில் சர்வதேச நீதி கோரி சுழற்சி முறையிலான உண்ணாவிரதப் போராட்டம் 06 வது நாளாக நேற்று யாழ்ப்பாணத்தில் நடைபெற்றது.

 குறித்த போராட்டம் யாழ் செம்மணியில் கடந்த 25ம் திகதி ஆரம்பமாகிய நிலையில் நாளை வரை நடைபெறவுள்ளது. இலங்கையில் நடைபெற்ற உள்நாட்டு யுத்தத்தின்போது நிகழ்த்தப்பட்ட மனித உரிமை மீறல்கள் மற்றும் வலிந்து காணாமலாக்கப்பட்டவர்கள் உள்ளிட்ட விவகாரங்களுக்கு நீதி வேண்டியும், உள்நாட்டுப் பொறிமுறையை நிராகரித்தும், சர்வதேச விசாரணையை வலியுறுத்தியும், செம்மணி விவகாரத்திற்கு நீதி கோரியும் குறித்த உண்ணாவிரதப் போராட்டம் ஆரம்பிக்கப்பட்டது.


 போராட்டத்தில் கலந்துகொண்டவர்ககள், சிறிலங்காவில் உள்நாட்டு பொறிமுறையை நிராகரிக்கின்றோம், தமிழ் இனவழிப்புக்கும் காணாமல் ஆக்கப்படுதல் போர் குற்றங்கள் மற்றும் மனிதப் புதைகுழிகள் குறித்து நாம் சர்வதேச சுயாதீன விசாரணையை மட்டுமே கோருகின்றோம் உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்திருந்தனர்

 அந்தவகையில் இப் போராட்டத்தின் இறுதி நாளான இன்று , மாபெரும் போராட்டமொன்றை முன்னெடுக்கத் தீர்மானித்துள்ள காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள், பொதுமக்கள் அனைவரையும் போராட்டத்தில் கலந்துகொள்ளுமாறு அழைப்பு விடுத்துள்ளனர்.

இன்று காலை 10.00 மணிக்கு ஆரம்பமாகி நண்பகல் 1.00 மணிக்கு நிறைவடைய உள்ளதோடு இப்போராட்டத்தில் அறிக்கை ஒன்று வாசிக்கப்பட்டு அந்த அறிக்கை மனித. உரிமை ஆணைக்குழுவிற்கு அனுப்பி வைக்கபபடவுள்ளமையும் இங்கு குறிப்பிடத்தக்கது

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!