யாழில் இந்திய ஜோதிடர்கள் மூவர் கைது!

#India #SriLanka #Jaffna #Arrest
Mayoorikka
2 months ago
யாழில் இந்திய ஜோதிடர்கள் மூவர் கைது!

சுற்றுலா வீசா மூலம் இலங்கை வந்த இந்தியர்கள், சட்டவிரோதமாக ஜோதிட நிலையம் அமைத்து இயக்கி வந்த நிலையில் இன்று மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர். 

 பருத்தித்துறை - தும்பளை வீதியில் குறித்த சட்டவிரோத ஜோதிட நிலையம் அமைத்து இயங்கி வந்துள்ளது.

 இந்நிலையம் தொடர்பாக தும்பளை பிரதேச கிராம அலுவர், பருத்தித்துறை நகரசபை தவிசாளரின் கவனத்திற்கு கொண்டு சென்றுள்ளார். 

 இவ் விடயம் தொடர்பில் நேற்று பருத்தித்துறை நகர பிதா நேரில் சென்று அவதானித்து குறித்த இந்தியர்களை வெளியேறுமாறு அறிவுறுத்தியுள்ளார்.

 ஆனாலும் ஜோதிட நிலையம் இயங்கி வந்ததை அடுத்து நகரபிதா வின்சன் டீ டக்ளஸ் போல் பருத்தித்துறை பொலிஸாருக்கு தகவல் வழங்கியதை அடுத்து, சம்பவ இடத்திற்கு விரைந்த பொலிஸார் இந்தியப் பிரஜைகளின் கடவுச் சீட்டை பரிசோதனை செய்த போது குறித்த மூவரும் சுற்றுலா வீசாவில் நாட்டிற்குள் வந்துள்ளமை தெரியவத்தது.

 இதனையடுத்து சட்டவிரோத ஜோதிட நிலையம் அமைத்து இயக்கி வந்த மூன்று இந்தியப் பிரஜைகளையும் பொலிஸார் கைது செய்துள்ளனர்.

லங்கா4 (Lanka4)

(வீடியோ இங்கே )

அனுசரணை

images/content-image/1754511373.jpg


உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!