வாகன விபத்தில் பேராதனை பல்கலைக்கழகத்தின் மருத்துவ பீடத்தின் 24 வயது மாணவர் மரணம்
கடுகண்ணாவையில் உள்ள உரபொல சந்தியில் ஏற்பட்ட வாகன விபத்தில் பேராதனை பல்கலைக்கழகத்தின் மருத்துவ பீடத்தின் 24 வயது மாணவர் ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
கடுகண்ணாவை-கொழும்பு பிரதான சாலையில் பல்கலைக்கழகத்திற்கு மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்த பல்கலைக்கழக மாணவர், கொழும்பு நோக்கி வாகனங்களை ஏற்றிச் சென்ற இரட்டை அடுக்கு லொறியில் மோதியதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
உயிரிழந்தவர் அரநாயக்க பகுதியைச் சேர்ந்தவரும், பேராதனை பல்கலைக்கழகத்தின் மருத்துவ பீடத்தின் மூன்றாம் ஆண்டு மாணவருமான திவங்க பியதிஸ்ஸ (24) என அடையாளம் காணப்பட்டுள்ளார்.
பாதுக்காப்பாகவும், போக்குவரத்து விதிமுறைகளுக்கு உட்பட்டு வாகனங்களை செலுத்துவதன் மூலம் விபத்துகளை குறைத்துக்கொள்ள முடியும்.

------------------------------------------------------------------------------------
A 24-year-old student of the Faculty of Medicine of the University of Peradeniya has died in a road accident at the Urapola junction in Kadugannawa, police said.
Police said the university student, who was on his way to the university on a motorcycle on the Kadugannawa-Colombo main road, collided with a double-decker lorry carrying vehicles towards Colombo.
The deceased has been identified as Divanka Piyatissa (24), a resident of Aranayake and a third-year student of the Faculty of Medicine of the University of Peradeniya.
Accidents can be reduced by driving safely and adhering to traffic rules.
------------------------------------------------------------------------------------
කඩුගන්නාව, ඌරාපොල මංසන්ධියේදී සිදුවූ රිය අනතුරකින් පේරාදෙණිය විශ්වවිද්යාලයේ වෛද්ය පීඨයේ 24 හැවිරිදි සිසුවෙකු මිය ගොස් ඇති බව පොලිසිය පවසයි.
කඩුගන්නාව-කොළඹ ප්රධාන මාර්ගයේ යතුරුපැදියකින් විශ්වවිද්යාලයට යමින් සිටි විශ්වවිද්යාල ශිෂ්යයා කොළඹ දෙසට වාහන රැගෙන යන තට්ටු දෙකේ ලොරියක ගැටීමෙන් අනතුර සිදුව ඇති බව පොලිසිය පවසයි.
මියගිය පුද්ගලයා අරණායක පදිංචිකරුවෙකු වන පේරාදෙණිය විශ්වවිද්යාලයේ වෛද්ය පීඨයේ තුන්වන වසරේ සිසුවෙකු වන දිවාංක පියතිස්ස (24) ලෙස හඳුනාගෙන ඇත.
ආරක්ෂිතව රිය පැදවීමෙන් සහ රථවාහන නීති රීති පිළිපැදීමෙන් අනතුරු අවම කර ගත හැකිය.
(வீடியோ இங்கே )