பிரான்சில் முன்னாள் அமைச்சர்களுக்கான அனைத்து கொடுப்பனவுகளையும் நிறுத்த நடவடிக்கை

#PrimeMinister #France #government #Minister
Prasu
1 month ago
பிரான்சில் முன்னாள் அமைச்சர்களுக்கான அனைத்து கொடுப்பனவுகளையும் நிறுத்த நடவடிக்கை

முன்னாள் அமைச்சர்களுக்கு வழங்கப்படும் சகலவித கொடுப்பனவுகளையும் நிறுத்துவதற்குரிய ஒப்பந்தத்தில் பிரதமர் செபாஸ்டியன் லெகார்னு கைச்சாத்திட உள்ளார். 

வரவுசெலவுத்திட்டத்தில் 40 பில்லியன் யூரோக்கள் சேமிப்பு எனும் கனவுடன் ஆரம்பித்த பிரான்சுவா பெய்ரூவின் திட்டம் பொய்த்துப்போக, நம்பிக்கை வாக்கெடுப்பில் தோல்வியடைந்து அவர் அரசாங்கத்தை விட்டு வெளியேறியிருந்தார். 

இந்நிலையில் புதிய பிரதமராக பொறுப்பேற்றுக்கொண்ட செபாஸ்டியன் லெகார்னு சர்ச்சைக்குரிய விடயம் ஒன்றை கையில் எடுத்துள்ளார். 

பிரான்சில் உள்ள முன்னாள் அமைச்சர்களுக்கு வழங்கப்படும் ‘வாழ்நாள் கொடுப்பனவுகள்’ திட்டத்தை நீக்குவது தொடர்பில் ஆராய்ந்து வருகிறார்.

”அச்சுறுத்தலுக்கு உள்ளான மக்களை பாதுகாப்பது குடியரசுக்கு இயல்பானது என்றாலும், தற்காலிக அந்தஸ்து (அமைச்சு பதவி) காரணமாக வாழ்நாள் முழுவதும் சலுகைகளைப் பெறமுடியும் என்பது நினைத்துப் பார்க்க முடியாதது” என பிரதமர் செபாஸ்டியன் லெகார்னு தெரிவித்தார். 

முன்னாள் அமைச்சர்களுக்கான கொடுப்பனவுகளை அடியோடு நீக்குவது அல்லது, அதனைக் குறைப்பதற்கு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. வரும் ஜனவரி 1, 2026 ஆம் ஆண்டு முதல் இந்த மாற்றம் நடைமுறைக்கு வரும் எனவும் எதிர்பார்க்கப்பட்டுள்ளது.

லங்கா4 (Lanka4)

(வீடியோ இங்கே )


உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!