பிரான்சில் பயங்கரவாத தாக்குதலுக்கு திட்டமிட்ட மேலும் ஒரு சிறுவன் கைது
#Arrest
#France
#Attack
#Terrorists
Prasu
1 month ago
பயங்கரவாத தாக்குதல் ஒன்றுக்கு திட்டமிட்டதாக தெரிவிக்கப்பட்டு அண்மையில் சிறுவன் ஒருவன் கைது செய்யப்பட்ட நிலையில், தற்போது மேலும் ஒரு சிறுவன் கைது செய்யப்பட்டுள்ளார்.
16 வயதுடைய சிறுவன் ஒருவன் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ளார். பிரெஞ்சு பயங்கரவாத தடுப்புப்பிரிவினர் இத்தவலை வெளியிட்டுள்ளனர்.
குறித்த சிறுவன் பிரான்சில் பயங்கரவாத தாக்குதல் ஒன்றை மேற்கொள்ள திட்டமிட்டிருந்ததாகவும், அதற்கான ஆயத்தங்களில் ஈடுபட்டிருந்ததாகவும் தெரிவிக்கப்படுகிறது.
குறித்த சிறுவனுடன் இணைந்து இதே திட்டத்தில் இருந்த 17 வயதுடைய சிறுவன் ஒருவன் கடந்த செப்டம்பர் 1 ஆம் திகதி கைது செய்யப்பட்டுள்ளார்.
(வீடியோ இங்கே அழுத்தவும்)
அனுசரணை
