பிரான்சில் இளைஞர்கள் இடையே அதிகரிக்கும் சிரிப்பு வாயு பயன்பாடு

இளைஞர்களிடையே நவீன போதைப்பொருளாக மாறியுள்ள ‘சிரிப்பு வாயு’ குடுவைகள் அதிகளவில் குப்பைகளில் வீசப்படுவதாக தெரிவிக்கப்படுகிறது.
இதனால் கழிவுகளை அழிப்பதில் பெரும் சவால்கள் எழுந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. சிறிய அலுமினிய குடுவைகளில் அடைத்து விற்பனை செய்யப்படும் இவ்வகை குடுவைகள் அதிகளில் இளைஞர்களிடையே பாவனையில் இருப்பதால், அதன் வெற்று குடுவைகள் குப்பைகளோடு சேர்த்து வீசப்படுகின்றன.
அதனை கழிவு அகற்றல் இயந்திரத்துக்குள் திணிக்கும்போது, வெடித்து சிதறி இயந்திரத்தை பாழாக்கின்றதாக தெரிவிக்கப்படுகிறது. நகர்ப்புற கழிவுகளை அகற்றும் நிறுவனங்களின் ஒன்றியம் இது தொடர்பில் கவலை வெளியிட்டுள்ளது.
250 தடவைகளுக்கும் மேல் இயந்திரங்கள் பழுதடைந்ததாகவும், பெரும் வெடிப்பு சத்தங்கள் எழுந்து, இயந்திரங்களில் பாகங்கள் சேதமடைவதாகவும், 2022 ஆம் ஆண்டோடு ஒப்பிடுகையில் 2024 ஆம் ஆண்டில் இரண்டு மடங்காக அதிகரித்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
(வீடியோ இங்கே அழுத்தவும்)
அனுசரணை



