பிரான்சில் தொழிற்சங்க வேலைநிறுத்த போராட்டம் - 500க்கும் மேற்பட்டோர் கைது
#Death
#Arrest
#France
#Protest
Prasu
2 hours ago

பிரான்ஸில் அனைத்தையும் முடக்குவோம் எனும் கோஷத்தோடு வேலை நிறுத்தத்தில் குதித்த தொழிற்சங்கத்தினர், நாட்டின் பல இடங்களில் 200 வரையான ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்டனர்.
197,000 பேர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதாக பிரான்ஸ் பொலிஸார் தெரிவித்தனர். பிரான்ஸ் தலைநகர் பரிஸ் உட்பட கிட்டத்தட்ட அனைத்து நகரங்களிலும் வன்முறையுடன் கூடிய ஆர்ப்பாட்டங்கள் பதிவாகின.
குப்பைத்தொட்டிகளை தீ வைத்தும், டயர்களை வீதியில் போட்டு கொளுத்தியும், பொதுச் சொத்துக்களை நாசமாக்கியும் ஆர்ப்பாட்டங்கள் முடிவுக்கு வந்திருந்தன.
ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட 540 பேர் கைது செய்யப்பட்டிருந்தனர். அவர்களில் 211 பேர் தலைநகர் பரிசில் கைதாகியுள்ளனர். 415 பேர் காவல்துறையினரின் கட்டுப்பாட்டுக்குள் வைக்கப்பட்டுள்ளனர்.
(வீடியோ இங்கே அழுத்தவும்)
அனுசரணை



