பிரான்சில் ஆயுதம் ஏந்திய நபர் ஒருவர் பொலிஸாரால் சுட்டுக்கொலை
#Death
#Police
#France
#people
#Attack
#GunShoot
Prasu
2 hours ago

தெற்கு பிரான்சின் மார்சேயில் ஐந்து பேர் காயமடைந்ததை அடுத்து, காவல்துறையினரால் ஒருவர் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார். குறித்த நபர் இரண்டு கத்திகள் மற்றும் ஒரு தடியுடன் ஆயுதம் ஏந்தி தாக்குதல் நடத்திய போது சுட்டுக்கொல்லப்பட்டுள்ளார்.
மேலும் தனது ஆயுதங்களை கீழே போடுமாறு காவல்துறை விடுத்த எச்சரிக்கைகளை புறக்கணித்ததால் துப்பாக்கி சூடு நடந்ததாக மார்சேய் வழக்கறிஞர் நிக்கோலஸ் பெசோன் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.
வாடகைக்காக ஹோட்டலில் இருந்து வெளியேற்றப்பட்ட அவர், தனது பழைய அறையில் ஒருவரைத் தாக்கி, ஹோட்டல் மேலாளரையும் அவரது மகனையும் கத்தியால் தாக்கியுள்ளார்.
(வீடியோ இங்கே அழுத்தவும்)
அனுசரணை



