வவுனியாவில் முதன்முறையாக டிஜிட்டல் தேசிய பிறப்பு சான்றிதழ்கள் வழங்கல்!

வவுனியா மாவட்டத்தில் முதன்முறையாக டிஜிட்டல் தேசிய பிறப்பு சான்றிதழ்கள் வழங்கும் ஆரம்ப நிகழ்வு மாவட்ட செயலகத்தில் இடம்பெற்றது .
இந்த திட்டத்தின் கீழ், 2021 இற்கு பின்னர் இலங்கையில் பிறந்த குழந்தைகள் புதிய தேசிய பிறப்பு சான்றிதழ்களினை பெற்றுக்கொள்ள முடியும் .
இந்த தேசிய பிறப்பு சான்றிதழ்கள் சிங்களம்-அல்லது தமிழ் மொழிகளிற்கு மேலதிகமாக ஆங்கில மொழியிலும் அச்சிடப்படுவது சிறப்பம்சமாகும். எனவே, தேவைக்கேற்ப அதை ஆங்கிலத்தில் மொழிபெயர்க்க வேண்டிய அவசியமில்லை.
இதன் ஆரம்ப நிகழ்வில் 30 குழந்தைகளுக்கு பிறப்புச் சான்றிதழ்கள் வழங்கி வைக்கப்பட்டன.
இந் நிகழ்வில் மாவட்ட செயலாளர் பி.ஏ. சரத்சந்ர, துணைப் பதிவாளர் நாயகம் ஆனந்தி ஜெயரட்ணம் மற்றும் பி. பிரபாகர், வவுனியா காணிப் பதிவாளர் கிருஷ்ணராஜ் லிசாந்தனி, வவுனியா பிரதேச செயலகத்தின் மேலதிக மாவட்டப் பதிவாளர் சசிகலா யோஜீஸ்வரன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
(வீடியோ இங்கே அழுத்தவும்)
அனுசரணை



