11 வருடங்களுக்கு பிறகு மீண்டும் தமிழ் சினிமாவிற்கு திரும்பும் நடிகர் அப்பாஸ்

90களில் தமிழ் சினிமாவின் இளம்பெண்கள் மனதில் நீங்கா இடம் பிடித்த 'சாக்லேட் பாய்' அப்பாஸ். 'காதல் தேசம்', 'VIP', 'படையப்பா' போன்ற படங்களில் தனது வசீகரமான தோற்றத்தாலும், மயக்கும் புன்னகையாலும் கோடிக்கணக்கான ரசிகர்களைக் கவர்ந்த அவர், நீண்ட காலமாக நடிக்காமல் இருந்தார்.
தற்போது, அந்த ஏக்கத்திற்கு ஒரு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில், ஒரு அற்புதமான செய்தி வெளியாகியுள்ளது. நடிகர் அப்பாஸ் 11 வருட இடைவெளிக்குப் பிறகு தமிழ் சினிமாவிற்கு மீண்டும் திரும்புகிறார்.
கடைசியாக 2014ல் வெளியான 'ராமானுஜன்' திரைப்படத்தில் காணப்பட்ட அப்பாஸ், தற்போது ஒரு புத்தம் புதிய நகைச்சுவைத் திரைப்படத்தின் மூலம் தனது இரண்டாவது இன்னிங்ஸைத் தொடங்குகிறார்.
இத்திரைப்படத்தில், இன்றைய தலைமுறையின் முன்னணி இசையமைப்பாளரும், நடிகருமான ஜி.வி. பிரகாஷ் குமார் மற்றும் 'லவ்வர்' பட நாயகி ஸ்ரீ கௌரி பிரியா ஆகியோருடன் முக்கிய கதாபாத்திரத்தில் அப்பாஸ் நடிக்கிறார்.
'லவ் டுடே' படத்தின் வெற்றிக்கு உதவியவரும், இயக்குனர் பிரதீப் ரங்கநாதனின் உதவி இயக்குனருமான மரியா ராஜா இளஞ்செழியன் இந்தப் படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமாகிறார்.
அவர் கூறும்போது, "இந்த கதாபாத்திரத்திற்கு அப்பாஸ் சாரைப் போன்ற ஒரு வசீகரமான நடிகர் தான் வேண்டுமென்று நான் உறுதியாக இருந்தேன். கதையைக் கேட்டவுடன் அவரும் மிகவும் ஈர்க்கப்பட்டு, இதுவே தனது சரியான மறுபிரவேசப் படமாக இருக்கும் என்று முடிவெடுத்தார்," என்றார்.
(வீடியோ இங்கே அழுத்தவும்)
அனுசரணை



