அஜித் குமார் ஓட்டிச் சென்ற கார் மீண்டும் விபத்தில் சிக்கியது.
#Cinema
#Accident
#sports
Lanka4
7 hours ago

இத்தாலியில் ஜிடி 4 கார் பந்தயம் நடைபெற்றது. இதில் நடிகர் அஜித் குமார் பங்கேற்றார். இந்த கார் பந்தயத்தில் அஜித் குமார் ஓட்டிச் சென்ற கார் மீண்டும் விபத்தில் சிக்கியது.
பந்தயத்தில் முன்னால் சென்ற கார் திடீரென டிராக்கின் குறுக்கே நின்றதால் அதன்மீது அஜித்தின் கார் மோதி விபத்துக்குள்ளானது.
இந்த விபத்தில் அஜித் காரின் இடதுபுற முன்பகுதி உடைந்து சேதமடைந்தது. காரில் இருந்த அஜித்திற்கு காயம் எதுவும் ஏற்படவில்லை. இந்நிலையில் கார் பந்தயத்தின்போது அஜித் குமாரின் காருக்குள் இருந்த கேமராவில் பதிவாகி உள்ளது இவ் விபத்தின் மூலம் ரசிகர்கள் மத்தியில் பெரும் மனக்கவலையை உண்டாக்கியுள்ளது.
(வீடியோ இங்கே அழுத்தவும்)
அனுசரணை



