AI இன் உதவியுடன் இசையமைத்த அனிருத்!

#India #Cinema #Music #ChatGPT #ADDA #Help #ADDAADS #SHELVAFLY #ADDAFLY #ADDAPOOJA
Lanka4
2 hours ago
AI இன் உதவியுடன் இசையமைத்த அனிருத்!

தமிழ் சினிமாவில் சிறந்த இசையமைப்பாளராக வலம் வந்து கொண்டிருப்பவர் அனிருத். தற்போது தமிழில் கூலி, மதராஸி, லவ் இன்சூரன்ஸ் கம்பெனி, ஜெயிலர் 2, ஜனநாயகன் உள்ளிட்ட பல திரைப்படங்களுக்கு இசையமைத்துக் கொண்டிருக்கிறார். இந்த நிலையில் கூலி திரைப்படம் தொடர்பான ஒரு நேர்காணலில் செயற்கை நுண்ணறிவை (AI) பயன்படுத்தித் தான் இசையை உருவாக்குவதாக அனிருத் தெரிவித்துள்ளார்.

சமீபத்தில் ஒரு பாடலுக்கு இசையமைக்கும் போது இரண்டு வரிகளுக்கு இசையமைக்கச் சிக்கல் ஏற்பட்டதாக அவர் தெரிவித்துள்ளார். இந்த நிலையில் அவர் சாட் ஜிபிடியிடம் (chatgpt) அந்த இரண்டு வரிகளையும் கொடுத்து உதவுமாறு கேட்டதாகவும், சாட் ஜிபிடி 10 தெரிவுகளை அனுப்பியதாகவும், அதில் ஒன்றைத் தேர்ந்தெடுத்து தனது இசைப் பணியைத் தொடர்ந்ததாகவும் அனிருத் தெரிவித்துள்ளார். 

அத்தோடு சில சமயங்களில் சரியான இசைத் தொகுப்புகள் கிடைக்காமல் இருக்கும் போது, இதுபோன்று செயற்கை நுண்ணறிவின் (AI) உதவியை நாடுவதில் எந்த தயக்கமும் தனக்கு இல்லை என்றும் இசையமைப்பாளர் அனிருத் தெரிவித்துள்ளார்.

லங்கா4 (Lanka4)

(வீடியோ இங்கே அழுத்தவும்)

அனுசரணை

images/content-image/1754259719.jpg




உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!