உலக தாய்ப்பால் வாரம் - ஆகஸ்ட் 1 முதல் 7 வரை

#Women #children #Day #World #Breastfeeding #Week
Prasu
13 hours ago
உலக தாய்ப்பால் வாரம் - ஆகஸ்ட் 1 முதல் 7 வரை

கடவுளின் படைப்பில் பெண் ஒரு அற்புதமான சிருஷ்டி.கருவுறுதல், தாய்ப்பால் சுரத்தல் என்பன பெண்ணுக்கான பெருங்கொடை. பிறந்த சிசு அருந்தும் முதல் அமிர்தம் தாய்ப்பால்.

தாய்ப்பாலில் உள்ள ஊட்டச்சத்துக்கள் சிறந்த மூளை வளர்ச்சியை ஆதரிக்கின்றன. குழந்தைகள் அதிக IQ திறனுடன் விளங்குவதற்கு தாய்ப்பால் உதவுகிறது என சில ஆய்வுகள் சொல்கின்றன. சுருக்கமாக, தாயின் பால் குழந்தைகளின் ஊட்டச்சத்து தேவைகளை பூர்த்தி செய்ய வடிவமைக்கப்பட்டுள்ளது. 

அத்தியாவசிய ஊட்டச்சத்துக்கள், பாதுகாப்பு கூறுகள் மற்றும் வளர்ச்சியை ஆதரிக்கும் பல ஆரோக்கிய நன்மைகளை வழங்குகிறது. தாய்ப்பாலருந்தும் குழந்தைகளுக்கு ஆஸ்துமா, ஒவ்வாமை, உடல் பருமன் மற்றும் டைப் 2 நீரிழிவு நோய் ஆகியவை பிற்காலத்தில் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் குறைவு. 

இப்படியெல்லாம் அமிர்தமான தாய்ப்பாலை விடுத்து புட்டிப்பால் கொடுத்து வளர்க்கப்படும் பிள்ளைகள் பாசப்பிணைப்பற்ற over active ஆன பிள்ளைகளாய் இருப்பதைக் கண்கூடாகப் பார்க்கின்றோம். தாய் தலைதடவி பாலூட்டும் பிள்ளைக்கும் போத்தலில் பாலூட்டும் பிள்ளைக்குமிடையில் அநேக வித்தியாசங்களைப் பார்க்கலாம்.

எதிர்காலத்தில் தொற்றாநோய்களுக்குள்ளாகும் பெரும்பாலான பிள்ளைகள் தாய்ப்பால் அருந்தாதவர்களே என்று ஆய்வுகளும் சொல்கின்றன. பொதுப்போக்குவரத்துகளில் கூட பேரூந்தின் ஒருமூலையில் புகையிரதத்தில் ஒவ்வொரு பெட்டிகளின் மூலையாக அமர்ந்து தாய்ப்பாலூட்டும் விதத்தில் அமைக்க வேண்டும். 

பல நேரங்களில் தாய்ப்பாலூட்டுவதைக் கூட காமக்கண் கொண்டு பார்க்கும் மிருகங்களால் எத்தனையோ பிஞ்சுகள் பசியாறாது அழுவதையும் மறைவின்றி தாய் தவிப்பதையும் இப்போதும் காணமுடிகிறது.

லங்கா4 (Lanka4)

(வீடியோ இங்கே அழுத்தவும்)

அனுசரணை

images/content-image/1754069187.jpg

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!