இம்ரான் கான் மற்றும் அவரது மனைவிக்கு 17 ஆண்டுகள் சிறை தண்டனை
#Prison
#Pakistan
#ImranKhan
#wife
Prasu
1 hour ago
ஊழல் குற்றச்சாட்டின் கீழ் சிறையில் அடைக்கப்பட்டுள்ள பாகிஸ்தானின் முன்னாள் பிரதமர் இம்ரான் கான் மற்றும் அவரது மனைவி புஷ்ரா பீபிக்கு பாகிஸ்தான் நீதிமன்றம் சிறை தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளது.
2021ம் ஆண்டு சவுதி அரசாங்கத்திடமிருந்து பரிசுகளை பெற்று மோசடி செய்ததாக கூறப்படும் வழக்கிலேயே இந்த தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
இருவருக்கும் பாகிஸ்தான் தண்டனைச் சட்டத்தின் பிரிவு 409ன் கீழ் 10 ஆண்டுகள் கடுங்காவல் சிறைத்தண்டனையும், ஊழல் தடுப்புச் சட்டத்தின் பல்வேறு பிரிவுகளின் கீழ் ஏழு ஆண்டுகள் சிறைத்தண்டனையும் விதிக்கப்பட்டுள்ளனர்.
(வீடியோ இங்கே )