9 ஆண்டுகளுக்கு பின்னர் இலங்கைக்கு விஜயம் செய்த ஐ.நா மனிதவுரிமை ஆணையாளர்

#SriLanka #Lanka4 #SHELVAFLY #ADDAFLY
Mayoorikka
2 months ago
9 ஆண்டுகளுக்கு பின்னர் இலங்கைக்கு விஜயம் செய்த ஐ.நா மனிதவுரிமை ஆணையாளர்

ஐ.நா.மனித உரிமைகள் உயர் ஸ்தானிகர் வோல்கர் டர்க், ஒன்பது ஆண்டுகளுக்குப் பிறகு இலங்கைக்கு இன்று (23) விஜயத்தை மேற்கொள்ளவுள்ளார். வெளியுறவு, வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலா அமைச்சு அறிக்கையை வெளியிட்டு, இதனைத் தெரிவித்துள்ளது. 

அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டதாவது, ஐ.நா.மனித உரிமைகள் உயர் ஸ்தானிகர் வோல்கர் டர்க் இன்று நாட்டிற்கு வருகை தந்து 26 ஆம் திகதி வரை நாட்டிலுள்ள பிரச்சினைகளை மேற்கொள்ளவுள்ளார். கடந்த 2016 ஆம் ஆண்டுக்குப் பிறகு ஐ.நா. மனித உரிமைகள் உயர் ஸ்தானிகர் இலங்கைக்கு மேற்கொள்ளும் முதல் பயணம் இதுவாகும்.

 இந்த விஜயத்தின் போது, ​​உயர் ஸ்தானிகர் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க மற்றும் பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய ஆகியோரை சந்திக்க உள்ளார்.- என்றுள்ளது. வெளியுறவு, வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலா அமைச்சர் பல அமைச்சரவை அமைச்சர்கள், பாராளுமன்ற உறுப்பினர்கள், மூத்த அரசு அதிகாரிகள், மதத் தலைவர்கள், சிவில் சமூக பிரதிநிதிகள் மற்றும் இராஜதந்திர சமூக உறுப்பினர்களை சந்திக்க உள்ளார்.

 இலங்கை மனித உரிமைகள் ஆணையத்துடனும் கலந்துரையாடல் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது என்று வெளியுறவு அமைச்சு தெரிவித்துள்ளது. ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் உயர் ஸ்தானிகர் வோல்கர் துர்க்கின் வருகையின் போது, ​​அவர் ஸ்ரீ தலதா மாளிகைக்கு வழிபாடு நடத்தவும், மல்வத்தை மற்றும் அஸ்கிரி மகாநாயக்கர்களைச் சந்திக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது.

 மேலும், அவர் யாழ்ப்பாணம் மற்றும் திருகோணமலைக்குச் சென்று வடக்கு மற்றும் கிழக்கு மாகாண ஆளுநர்களைச் சந்திக்கவும் திட்டமிடப்பட்டுள்ளதாக வெளியுறவு, வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலா அமைச்சகம் தெரிவித்துள்ளது.

லங்கா4 (Lanka4)


(வீடியோ இங்கே அழுத்தவும்)

அனுசரணை


images/content-image/1750630849.jpg


உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!