இலங்கையில் மூன்று இலட்சத்தை தொடும் தங்கத்தின் விலை!
#SriLanka
#Gold
Mayoorikka
3 months ago

இலங்கையில் இன்று 24 கரட் தங்கம் ஒரு பவுண் 269,000 ரூபாவாக விற்பனை செய்யப்படுகிறது என தெரிவிக்கப்படுகின்றது. இலங்கையில் கடந்த சில மாதங்களாக தங்கத்தின் விலையானது சற்று ஏற்ற இறக்கத்துடன் காணப்படுகின்றது.
அந்தவகையில் கொழும்பு செட்டியார் தெருவின் இன்றைய தங்க நிலவரப்படி, 24 கரட் தங்கம் ஒரு பவுண் 269,000 ரூபாவாக விற்பனை செய்யப்படுகிறது. 22 கரட் தங்கம் ஒரு பவுண் 248,800 ரூபாவாக விற்பனை செய்யப்படுகிறது.
இதன்படி, 24 கரட் தங்கத்தின் ஒரு கிராமின் விலை 33,625 ரூபாவாகவும், 22 கரட் தங்கத்தின் ஒரு கிராமின் விலை 31,100 ரூபாவாகவும் விற்பனை செய்யப்படுகிறது. அதேநேரம், உலக சந்தையில் இன்றைய தினம் தங்கத்தின் விலை வீழ்ச்சியை பதிவு செய்துள்ளது. இதன்படி, உலக சந்தையில் ஒரு அவுன்ஸ் தங்கத்தின் விலை 3,429 அமெரிக்க டொலராக நிலவுகிறது.
(வீடியோ இங்கே அழுத்தவும்)
அனுசரணை



