சமூக ஊடகங்கள் பதிவு செய்யப்படும் என போலி செய்தி பரப்பப்படுகின்றது!
அண்மைகாலங்களாக சமூக ஊடகங்களில் குறிப்பாக வட்ஸ்அப் போன்ற தளங்களில் தொலைபேசி அழைப்புக்கள், மற்றும் சமூக ஊடங்கங்கள் ஊடாக வரும் அழைப்புகளும் பதிவு செய்யப்படும், அனைத்து அழைப்பு பதிவுகளும் சேமிக்கப்படும் என பரவுகின்ற தகவலில் எந்தவித உண்மைத் தன்மையும் இல்லை என தெரிவிக்கப்படுகின்றது.
தொலைத்தொடர்பு அமைச்சினால் உத்தியோகபூர்வமாக அந்த தகவல் வெளியிடப்படவில்லை.
அவ்வாறு வெளியிடப்படுமாயின் அமைச்சின் செயலாளரோ அல்லது அமைச்சரோ வர்த்தமானி அறிவித்தலின் ஊடாகவோ அல்லது ஊடக மாநாட்டின் ஊடாகவே தெரிவிப்பார்கள். அவ்வாறு எந்தவித தகவலும் அறிவிக்கப்படவில்லை.
இந்த தகவல் அனர்த்தத்தின் பின்னர் வெளியாகுகின்ற ஒரு பதிவு. அண்மைக்காலங்களாக ஜனாதிபதிக்கு எதிராக அவதூறு பரப்பப்படுகின்றது. இந்த நிலையில் என்பிபி ஆதரவாளர்களினால் கட்டவிழித்து விடப்பட்டுள்ள பரப்புரை என ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.
எனவே மக்கள் போலிக் செய்திகளை கண்டு அதன் உண்மைத்தன்மைகளை புரிந்து கொண்டு அடுத்தவர்களுக்கு பகிர வேண்டும் எனவும் அவர்கள் கேட்டுக் கொண்டுள்ளனர்.
அண்மையில் கூட போலிச் செய்திகள் தொடர்பில் 57 முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாகவும், மக்களை அச்சத்தையும் குழப்பத்தையும் ஏற்படுத்தும் வகையில் செய்திகளைப் பரப்பும் நபர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுப்பதற்கு பொலிஸார் மற்றும் முப்படையினருக்கு அதிகாரம் அளிக்கப்பட்டுள்ளது என பொலிஸ் ஊடகப் பேச்சாளர் எஃப்.யு. வுட்லர் தெரிவித்தமையும் குறிப்பிடத்தக்கது.
(வீடியோ இங்கே )
அனுசரணை
