மிகச் சிறப்பாக இடம்பெற்ற வல்வெட்டித்துறை இந்திர விழா உற்சவம்!
#SriLanka
#Jaffna
#Festival
#Lanka4
#SHELVAFLY
#ADDAFLY
Mayoorikka
4 months ago

யாழ்பாணம் வல்வெட்டித்துறை முத்துமாரியம்மன் ஆலயத்தின் வருடாந்த திருவிழாவின் கொடியிறக்க திருவிழாவின் இந்திரவிழா உற்சவம் நேற்று இரவு மிகசிறப்பாக இடம்பெற்றது.
இதில் முக்கிய வீதிகளிலும் வர்ணவிளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட மின்விளக்குகள், கலைநிகழ்ச்சிகள், நடன ஆற்றுக்கைகள், கவியங்கங்கள், கணித சமர் போட்டி, சொற் பொழிவுகள், புகைக்குண்டு ஏற்றல், வான வேடிக்கைகள் இடம்பெற்றது.
நேற்று இரவு வீதியுலா சென்ற முத்துமாரி அம்மன் இன்று அதிகாலையில் முத்துமாரி அம்மன்,சமேதராக ஆலயத்தினை வந்தடைந்தனர்.
இதில் ஆயிரக்கணக்கான மக்கள் கலந்துகொண்டு முத்துமாரியம்மனின் அருட்காடச்சத்தினை பெற்றுச் நிகழ்ச்சிகளையும் கண்டு களித்தனர்.
குறித்த இந்திரவிழாவானது வல்வெட்டித்துறை நகரில் நூற்றாண்டு கடந்தும் இன்றுவரை கொண்டாடப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
(வீடியோ இங்கே அழுத்தவும்)
அனுசரணை



