பொலிஸ் காவலில் உயிரிழந்த இளைஞன்: உடலை தோண்டி எடுக்க நீதிமன்றம் உத்தரவு
#SriLanka
#Police
#Prison
#Lanka4
#shelvazug
#SHELVA FLY
Mayoorikka
5 months ago

வெலிக்கடை பொலிஸ் காவலில் இருந்தபோது உயிரிழந்த இளைஞனின் உடலை தோண்டி எடுத்து, மூன்று சிறப்பு மருத்துவர்கள் கொண்ட மருத்துவக் குழுவால் முழுமையான பிரேத பரிசோதனை நடத்தி, அறிக்கை சமர்ப்பிக்குமாறு கொழும்பு தலைமை நீதித்துறை மருத்துவ அதிகாரிக்கு கொழும்பு நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
பாதிக்கப்பட்ட தரப்பினரின் கோரிக்கையை பரிசீலித்த பின்னர் கொழும்பு கூடுதல் நீதவான் கெமிந்த பெரேரா இந்த உத்தரவைப் பிறப்பித்தார்.
வெலிக்கடை பொலிஸ் காவலில் இருந்த குறித்த இளைஞன், கடந்த 2 ஆம் திகதி அதிகாலை மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் உயிரிழந்தமை குறிப்பிடத்தக்கது.
(வீடியோ இங்கே அழுத்தவும்)
அனுசரணை




