இந்திய பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்தார் நாமல்!

நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்துள்ளார்.
இந்தியாவில் நடைபெற்று வரும் "இந்தியாவின் விழிப்புணர்வு" மாநாட்டில் பங்கேற்றபோது, நாமல் ராஜபக்ஷ இந்தியப் பிரதமரைச் சந்தித்தார்.
குறித்த மாநாட்டில் உரையாற்றிய நாமல், இலங்கையில் பொருளாதார நெருக்கடிக்கு முக்கிய காரணம் அரசியல் காரணங்களால் நாட்டில் வளர்ச்சித் திட்டங்கள் தாமதமாகி வருவதாகக் கூறினார்.
உதாரணமாக, சம்பூர் மின் உற்பத்தி நிலையம் 2015 இல் தொடங்க திட்டமிடப்பட்டிருந்ததாகவும், ஆனால் அந்த தாமதம் மின்சார நெருக்கடியை ஏற்படுத்தியதாகவும் அவர் குறிப்பிட்டார்.
2022 ஆம் ஆண்டு ஏற்பட்ட இந்த எரிசக்தி நெருக்கடி, பின்னர் நிதி நெருக்கடியாக மாறியதாக எம்.பி. குறிப்பிட்டார். இந்தியாவில் நடைபெற்ற "இந்தியாவின் விழிப்புணர்வு" மாநாட்டில் உரையாற்றும் போதே நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ இந்தக் கருத்துக்களைத் தெரிவித்தார்.
அமெரிக்காவின் வரிகள் குறித்து கருத்து தெரிவித்த எம்.பி., தெற்காசியாவில் உள்ள அனைத்து நாடுகளும் அரசியல் பிளவுகள் இல்லாமல் பிராந்திய கூட்டாண்மைகளை வலுப்படுத்த பாடுபட வேண்டும் என்று கூறினார்.
இந்தியப் பெருங்கடல் பிராந்தியத்தில் உள்ள நாடுகள் புதிய வர்த்தக கூட்டாண்மைகளை உருவாக்க வேண்டும் என்றும் அவர் கூறினார்.
(வீடியோ இங்கே அழுத்தவும்)
அனுசரணை




