புத்தாண்டிற்கு பின்னர் உயர்தர பரீட்சை பெறுபேறுகள்!

#SriLanka #exam #Lanka4 #Tamilnews #Examination #shelvazug #SHELVA FLY
Mayoorikka
3 weeks ago
புத்தாண்டிற்கு பின்னர் உயர்தர பரீட்சை பெறுபேறுகள்!

2024 கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சைப் பெறுபேறுகள் புத்தாண்டுக்குப் பின்னர் வெளியிடப்படும் என இலங்கை பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் அமித் ஜெயசுந்தர தெரிவித்துள்ளார்.

 பரீட்சை பெறுபேறுகள் குறித்து ஊடகங்கள் வினவியபோது அவர் இந்தக் கருத்தைத் தெரிவித்தார். மொத்தம் 333,183 மாணவர்கள் பரீட்சை எழுத்தினர். அவர்களில் 253,390 பேர் பாடசாலை மாணவர்கள். 79,793 பேர் தனியார் பரீட்சார்த்திகள்.

 இந்தத் பரீட்சை 2024 நவம்பர் 25 முதல் டிசம்பர் 31 வரை நாடு முழுவதும் 2312 பரீட்ச நிலையங்களில் நடைபெற்றது. உயர் தரப் பரீட்சையின் 66 பாடங்களுக்கான செயல்முறை பரீட்சையானது கடந்த பெப்ரவரி 08 தொடக்கம் 10 ஆம் திகதி வரை நடைபெற்றன.

லங்கா4 (Lanka4)

(வீடியோ இங்கே அழுத்தவும்)

அனுசரணை

images/content-image/1744087700.jpg

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!