உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் ஞானசார தேரரிடம் விசாரணை நடத்துமாறு கோரிக்கை!

#SriLanka #Gnanasara Thero #Easter Sunday Attack
Dhushanthini K
2 months ago
உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் ஞானசார தேரரிடம் விசாரணை நடத்துமாறு கோரிக்கை!

உயிர்த்த ஞாயிறு தாக்குலுடன் தொடர்புடைய பல விடயங்களை தாம் அறிந்திருப்பதாக ஞானசார தேரர் தெரிவித்த கருத்து தொடர்பில் உரிய விசாரணைகளை முன்னெடுக்குமாறு வலியுறுத்தி குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தில் இலஞ்ச ஊழல் வீண்விரயத்துக்கு எதிரான பிரஜைகள் அமைப்பினால்   முறைப்பாடொன்று பதிவு செய்யப்பட்டுள்ளது.

 உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் பிரதான சூத்திரதாரி யார் என்பது மற்றும் அதனுடன் தொடர்புடைய பல விடயங்களை தாம் அறிந்திருப்பதாக அண்மையில் இடம்பெற்ற ஊடக சந்திப்பின் போது பொதுபலசேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர் தெரிவித்திருந்தார்.

 அத்துடன் இந்த விடயங்களை ஜனாதிபதி உள்ளிட்ட உயர் அதிகாரிகளுக்கு தாம் வெளிப்படுத்த தயாராக இருப்பதாகவும் குறிப்பிட்டிருந்தார்.

 இந்நிலையிலேயே இந்த விடயம் தொடர்பில் உரிய விசாரணைகளை மேற்கொள்ளுமாறு குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தில் இலஞ்ச ஊழல் வீண்விரயத்துக்கு எதிரான பிரஜைகள் அமைப்பு நேற்று (07.03) இந்த முறைப்பாட்டை பதிவு செய்திருந்தது.


பொதுமக்களுடைய நன்மை கருதி லங்கா4 (Lanka4) ஊடகம் இச்செய்தியை பிரசுரிக்கிறது.

மேலதிக செய்திகளை வீடியோவில் அறிவதற்கு இந்த நீல நிற இணைப்பினை கிளிக் செய்யவும்


images/content-image/1741406842.jpg


உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!