நாற்பது வருடங்களுக்குப் பின் வரலாறு காணாத வெள்ளப் பாதிப்பை எதிர்கொண்டுள்ள மன்னார்!
வடக்கில் மன்னார் மாவட்டம் 40 வருடங்களுக்குப் பின்னர் வரலாறு காணாத பாதிப்பை எதிர்கொண்டுள்ளனர்.
இம் மாவட்டத்தில் 30 ஆயிரத்து 569 குடும்பங்களைச் சேர்ந்த ஒரு லட்சத்து 27 ஆயிரத்து 269 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
மன்னார் மாவட்டத்தில் மன்னார் பிரதேச செயலாளர் பிரிவு ஓரளவு பாதிப்பை எதிர்நோக்கியிருந்தாலும் நானாட்டான் ,முசலி ,மாந்தை கிழக்கு மற்றும் மாந்தை மேற்குப் பிரதேசங்கள் பாரிய பாதிப்பினை எதிர் நோக்கியது.
சுமார் 822 வீடுகள் பாதிக்கப்பட்டுள்ளதுடன் 22 வீடுகள் முற்றாகச் சேதமடைந்துள்ள நிலையில் 106 இடைத்தங்கல் முகாம்களில் மக்கள் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
பெரியமடு, கூராய், சீது விநாயகபுரம், இசைமானத்தாழ்வு உட்படப் பல பகுதிகள் இன்னும் வெள்ளத்தில் மூழ்கியுள்ள நிலையில் கடற்படை, ஆகாயப் படையின் உதவியுடன் அத்தியாவசியப் பொருட்கள் வழங்கப்பட்டு வருகிறது.
மன்னாரில் மடு பிரதேச செயலகத்துக்குட்பட்ட குஞ்சுக் குளம் பகுதியில் 300 குடும்பங்கள் வெளிவர முடியாத நிலையில் வெள்ள நீர் வீதிகளை மறித்துக் காணப்படுவதாக மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் கனகேஸ்வரன் தெரிவித்தார்.
இதேவேளை, வெள்ள அனர்த்தம் காரணமாகப் பல கால்நடைகள் இறந்துள்ளதுடன் கால்நடைகள் பலவற்றைக் காணவில்லை எனவும் தெரியவருகின்றது.
(வீடியோ இங்கே )
அனுசரணை
