அனுர எனும் மக்கள் தொண்டன்..!

#SriLanka #Disaster #Help
Mayoorikka
53 minutes ago
அனுர எனும் மக்கள் தொண்டன்..!

 வெளிநாடுகளில் இருந்து மலைபோல உதவிகள் வந்து குவிகின்றன. 

 இந்தியா… கேட்கவே வேண்டாம்! தன்னுடைய சொந்த நாட்டில் பாதிப்பு ஏற்பட்டிருப்பதுபோல உணர்ந்து, அவ்வளவு பெரும் உதவிகளைச் செய்துகொண்டு இருக்கிறது. ‘Operation Sagar Bandu’ இலங்கையின் வரலாற்றில் பொன் எழுத்துக்களில் பொறிக்கப்படும். 

 பாகிஸ்தானில் இருந்தும் ஏராளமான உதவிகள்! அவர்களின் மீட்பு அணியினர், ஹெலிகொப்டர்கள், உதவிப்பொருட்கள்…!

 மாலைதீவின் $50,000, நேபாளத்தின் $200,000, அவுஸ்திரேலியாவின் $1,000,000, UAE இல் C-17 இராணுவ விமானங்கள் சுமந்துவரும் பெருமளவு உதவிகள், அமெரிக்காவில் இருந்து நாளை 4 ஆம் திகதி வந்து இறங்கப்போகும் இரண்டு C-130 விமானங்கள், சுவிஸில் இருந்து 5 ஆம் திகதி வரபோகும் மீட்பு அணி என ஏராளமான வெளிநாட்டு உதவிகள்! 

 இந்த உதவிகள் அனைத்துக்கும் பின்னால் இருப்பது ‘அனுர’ எனும் ஒற்றை மனிதன்மீதான பெரும் நம்பிக்கை. 

அவரின் ‘ஊழல் அற்ற நிர்வாகத்தின்’ மீதான நம்பிக்கை. “இவரை நம்பி உதவிப்பொருட்கள் அனுப்பினால், இவர் உரிய மக்களிடம் சேர்ப்பிப்பார்” என்கிற ஒரு clearance தான் இந்த உதவிகள் வந்துகுவியக் காரணம்.

images/content-image/1764821755.jpg

 வழக்கமாக தனிநபர்களுக்கு அனுப்பப்படும் வெளிநாட்டுப் பண உதவிகள், இம்முறை அரசாங்கத்தின் வங்கிக் கணக்குக்கு அனுப்பப்படுவதும் அனுரமீதான நம்பிக்கையே..!

 மாறாக, மக்களுக்கு வரும் உதவிப்பொருட்களை தன்னுடைய வீட்டுக்கு எடுத்துச் செல்லும் அமைச்சர்களும், அரச அதிகாரிகளும் இருந்திருந்தால் நிலைமையை யோசித்துப் பாருங்கள். 

images/content-image/1764821767.jpg

அதுதான் கடந்த காலத்தில் நடந்தது. மக்களுக்கு என அனுப்பப்படும் உணவுப் பொருட்களை, மக்களுக்கு வழங்காமல் களஞ்சியங்களில் சேமித்து வைத்து ‘காலாவதி திகதியே’ காலாவதி ஆனபின்னும் வைச்சு ‘வடிவு’ பார்க்கும் நிர்வாகங்களே கடந்த காலத்தில் இருந்தன. 

 ஒரு நாட்டில் ‘ஊழல் இல்லாத நிர்வாகம்’ இருந்தால் உலகநாடுகள் அதை விரும்பும். 

சர்வதேச நன்மதிப்பு ஏற்படும். உதவிகள் குவியும். எல்லாமே சாத்தியமாகும்..!

 ஜனாதிபதி அனுர அதை சாதித்துக்காட்டி வருகிறார்.


லங்கா4 (Lanka4)

(வீடியோ இங்கே )

அனுசரணை

images/content-image/1754511373.jpg


உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
சிறப்பு கட்டுரை