கிளிநொச்சி மாவட்ட செயலகத்தில் சுதந்திர தின கொண்டாட்டம்!
#SriLanka
#Kilinochchi
Mayoorikka
10 months ago
இலங்கையின் 77வது சுதந்திர தின நிகழ்வுகள் நாட்டின் பல பாகங்களிலும் இடம்பெற்று வருகின்றது. அந்தவகையில், சுதந்திர தின நிகழ்வு கிளிநொச்சி மாவட்ட செயலகத்திலும் அனுஷ்டிக்கப்பட்டது.
பாண்ட் வாத்திய இசை அணிவகுப்புடன் உத்தியோகத்தர்கள் அழைத்து வரப்பட்டு தேசியக்கொடி ஏற்றப்பட்டது. தொடர்ந்து சுதந்திரத்திற்காக பாடுபட்டவர்களுக்கு இரண்டு நிமிட அஞ்சலி செலுத்தப்பட்டு, மரக்கன்றுகள் நாட்டும் நிகழ்வும் இடம்பெற்றது.
குறித்த நிகழ்வில் மாவட்ட செயலாளர் எஸ்.முரளிதரன் உள்ளிட்ட மாவட்ட செயலக உத்தியோகத்தர்கள் கலந்து கொண்டனர்.
பொதுமக்களுடைய நன்மை கருதி லங்கா4 (Lanka4) ஊடகம் இச்செய்தியை பிரசுரிக்கிறது.
மேலதிக செய்திகளை வீடியோவில் அறிவதற்கு இந்த நீல நிற இணைப்பினை கிளிக் செய்யவும்