மீண்டும் மூடப்பட்ட கண்டி - கொழும்பு வீதியின் பஹல கடுகன்னாவ பகுதி
#Colombo
#kandy
#Road
#closed
#Safety
Prasu
1 hour ago
தேசிய கட்டட ஆராய்ச்சி நிறுவனத்தின் அறிவிப்புக்கு அமைய கண்டி - கொழும்பு வீதி பஹல கடுகன்னாவ வீதியை மூடுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக கேகாலை மாவட்ட செயலாளர் ஜே.எம்.ஹேரத் தெரிவித்தார்.
அண்மையில் ஏற்பட்ட மண்சரிவு காரணமாக அவ்வீதி பல சந்தர்ப்பங்களில் தற்காலிகமாக மூடப்பட்டிருந்த நிலையில், நேற்று பிற்பகல் முதல் போக்குவரத்திற்காக திறக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு மீண்டும் இன்று மூடப்பட்டுள்ளது.
இதனிடையே, மலையக ரயில் மார்க்கத்தில் சேதமடைந்த பேராதனை பாலத்தை சீரமைப்பது தொடர்பில் ஆய்வொன்று மேற்கொள்ளப்படுவதாக ரயில்வே பொது முகாமையாளர் ரவீந்திர பத்மப்பிரிய குறிப்பிட்டார்.
(வீடியோ இங்கே )