உயிரிழந்த விமானிக்கு ஜனாதிபதி உட்பட அரசியல் பிரபலங்கள் அஞ்சலி
#SriLanka
#Death
#Climate
#AnuraKumaraDissanayake
#Disaster
#tribute
#Pilot
Prasu
1 hour ago
டித்வா புயலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணம் வழங்கிக்கொண்டிருந்த போது ஹெலிகொப்டர் விபத்தில் உயிரிழந்த விமானி நிர்மால் சியம்பலாபிட்டியவின் பூதவுடலுக்கு ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க இறுதி அஞ்சலி செலுத்தினார்.
ஜனாதிபதி விமானியின் பூதவுடலுக்கு இறுதி அஞ்சலி செலுத்தியதுடன் அவரது மனைவி, பெற்றோர், சகோதர சகோதரிகள் உட்பட குடும்பத்தினர் அனைவருக்கும் தனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்தார்.

இதேவேளை, எதிர்க்கட்சி தலைவர் சஜித் மற்றும் முன்னள் ஜனாதிபதி ரணில் ஆகியோரும் விமானியின் உடலுக்கு அஞ்சலி செலுத்தினர்.
சுகாதார மற்றும் ஊடகத்துறை அமைச்சர் வைத்தியர் நலிந்த ஜயதிஸ்ஸ, பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் எயார் வைஸ் மார்ஷல் சம்பத் துய்யகொந்த ஆகியோரும் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.
(வீடியோ இங்கே )