அவுஸ்திரேலியாவில் இலவசமாக பட்டப்பின்படிப்பை கற்பதற்கான வாய்ப்பு!

அவுஸ்திரேலியாவில் இலவசமாக பட்டப்பின்படிப்பை கற்பதற்கான வாய்ப்பு! அது சித்திரை 30 வரை திறந்திருக்கும். வேண்டியவர் முயற்சி செய்யலாம்.
ஐந்து, ஆறு வருடங்களாய் தொடர்ந்து முயற்சி செய்து Australia Awards ஐ வென்ற நண்பர்கள் இருக்கிறார்கள். எனவே தயங்காமல் இம்முறையும் விண்ணப்பியுங்கள். இனி புதிதாக விண்ணப்பிப்பவர்களுக்காக சில அடிப்படை விடயங்கள்...
Australia Awards அவுஸ்திரேலிய அரசாங்கத்தால் வழங்கப்படுகின்ற இலங்கையை பொறுத்தவரை பட்டபின் படிப்புக்கான(masters) முற்றுமுழுதான இலவச புலமைப்பரிசில் ஆகும். அதாவது விமான பயணச்சீட்டு லிருந்து கல்வி கற்பதற்கான செலவு மற்றும் வாழ்க்கைச் செலவு உப்பட அனைத்து செலவுகளும் அவுஸ்ரேலிய அரசாங்கத்தால் வழங்கப்படும்.
இதற்கு அரசாங்க மற்றும் தனியார் நிறுவனங்களில் தொழில் செய்கின்றவர்கள் என யாரும் விண்ணப்பிக்க முடியும். இதற்கு IELTS இல் overall score 6.5 ற்கு குறையாமலும் listening, reading, writing and speaking இல் எதற்கும் 6.0 க்கு குறையாமலும் பெற்றிருக்க வேண்டும். தெரிவு செய்யப்பட்ட 15 மாவட்டங்களுக்கு overall score 6 க்கு குறையாமலும் listening, reading, writing and speaking இல் 5.5 க்கு குறையாமலும் பெறுதல் போதுமானது. வடக்கு கிழக்கில் உள்ள அனைத்து மாவட்டங்களும் இந்த 15க்குள் அடக்கம்.
கிடைக்கும் நன்மைகள் 1. பட்டப்பின் படிப்பை தெரிவு செய்யும் துறையில் பூர்த்தி செய்யலாம். 2.குடும்பத்துடன் அவுஸ்திரேலியாவில் கல்வி கற்கும் காலத்தில் குடியிருக்கலாம். (குடும்பத்திற்கான செலவை நீங்கள் பார்க்கவேண்டும்)
3. ஒரு அபிவிருத்தி அடைந்த நாட்டின் கட்டமைப்புகள், வசதிகள் வாழ்க்கைமுறையை நேரடியாக அனுபவிக்கலாம்.
4.உங்கள் வாழ்க்கைத் துணை முழு நேரமாக வேலை செய்யலாம். உங்களுக்கு கிழமைக்கு 20 மணித்தியாலம் வேலை செய்யலாம்.
5. அரசாங்க உத்தியோகமாயின் உங்களுக்குரிய சம்பளம் கல்வி கற்கும் காலத்தில் உங்களுடைய வங்கிக்கு தொடர்ந்து சென்று கொண்டிருக்கும்.
6. பிள்ளைகள் ஒரு ஆங்கில சூழலில் இரண்டு வருடங்கள் கற்பதால் அல்லது பழகுவதால் மிக இலகுவாக ஆங்கில அறிவை பெற்றுக் கொள்வர்.
7. உங்களுக்கு, வாழ்க்கைத் துணைக்கு ஆங்கில அறிவு மேம்படும். 8.இந்தப் புலமைப்பரிசிலுடைய எதிர்பார்ப்பு அவுஸ்திரேலியாவில் நீங்கள் பெற்ற கல்வியை கொண்டு இலங்கையை முன்னேற்றுவீர்கள் என்பதாகும். (எனவே கட்டாயம் திரும்பி நாட்டிற்கு வர வேண்டும்) இதற்காக முதலில் இணைய தளத்தில் விண்ணப்பத்தை சரியான முறையில் பூர்த்தி செய்ய வேண்டும்.
இதனடிப்படையில் நேர்முகத்தேர்வுக்கு அழைக்கப்படுகின்ற விண்ணப்பதாரிகளிலிருந்து தெரிவு செய்யப்படுவர்கள் புலமைப்பரிசிலை பெற்றுக் கொள்வார்கள்.
மாற்றுத்திறனாளிகளுக்கு விசேட வாய்ப்பும் வழங்கப்படுகிறது.
காசும் தந்து, Masters உம் தந்து, குடும்பத்தோட அவுஸ்திரேலியாவிலிருந்து படி ஊரையும் சுத்திப்பார் எண்டால் யார் வேண்டாம் எண்டுவாங்கள்???
பொதுமக்களுடைய நன்மை கருதி லங்கா4 (Lanka4) ஊடகம் இச்செய்தியை பிரசுரிக்கிறது.
மேலதிக செய்திகளை வீடியோவில் அறிவதற்கு இந்த நீல நிற இணைப்பினை கிளிக் செய்யவும்



