தையிட்டி விகாரை விவகாரம் குறித்து ஜனதிபதி முன்னிலையில் அனைவரும் கதைத்திருக்க வேண்டும்!

ஜனாதிபதி அனுரகுமாரதிசநாயக்க தலைமையில் இடம்பெற்ற யாழ்மாவட்ட அபிவிருத்தி ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில் தையிட்டி விகாரை விவகாரம் குறித்து ஜனாதிபதி பதிலளிக்கவிருந்த சந்தர்ப்பத்தில் அர்ச்சுனா இராமநாதன் இந்த விடயத்தை திசைதிருப்பியதும் ஏனைய நாடாளுமன்ற உறுப்பினர்கள் அதிகாரிகள் வாய்திறக்காமல் விட்டதும் மிகப் பெரிய பிழையாகும் என தையிட்டி காணி உரிமையாளர்களில் ஒருவரான சுகுமாரி சாருஜன் தெரிவித்துள்ளார்.
கஜேந்திரகுமார் பொன்னம்பலம் இந்த பிரச்சினையை எழுப்பியபோது கட்டாயமாக அவருக்கு பக்கபலமாக கதைத்திருக்கவேண்டும் எனவும் அவர் தெரிவித்துள்ளார். அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது-
போராட்டம் கடந்த இரண்டு வருடங்களாக ஒவ்வொரு மாதமும் நடந்து வருகின்றது. நானும் அதில் இணைந்துகொண்டுள்ளேன். இதுவரைக்கும் எந்த தீர்வும் எட்டப்படவில்லை. பாராளுமன்ற தேர்தலிற்கு முன்னர் எமக்கான ஒரு சாதகமான சமிக்ஞை கிடைக்கும் என நாங்கள் எதிர்பார்த்தோம் -
கிடைக்கவில்லை. இம்முறை ஜனாதிபதி அபிவிருத்தி அபிவிருத்தி ஒருங்கிணைப்பு குழு கூட்டத்திற்கு வரும்போது ஏதாவது சாதகமான சமிக்ஞை வெளியாகும் என எதிர்பார்த்திருந்தோம். இது குறித்து நாங்கள் பல தரப்புடனும் பேசியிருந்தோம். ஆளுநரிடம் முறையிட்டிருந்தோம், ஆளுநர் எங்களை சந்தித்து பேசியவேளை சாதகமான விதத்திலேயே பதில் சொல்லியிருந்தார்.
தீர்க்கப்படவேண்டிய விடயம் என தெரிவித்திருந்தார். போனமுறை கூட்டத்தில் கூட திரு கஜேந்திரகுமார் பொன்னம்பலம் எங்களின் பிரதிநிதியாக எங்களின் பிரச்சினையை அந்த இடத்திற்கு கொண்டு சென்றிருந்தார்.
அதேபோல சந்திரசேகரன் கூட இது தவறான கட்டிடம் அகற்றப்படவேண்டும் என தெரிவித்திருந்தார். அந்த அடிப்படையில் இந்தமுறை கூட்டத்திற்கு ஜனாதிபதி வருகை தந்திருந்த நிலையில் நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் இந்த பிரச்சினையை ஜனாதிபதியை நோக்கி மிகவும் தாழ்மையான முறையில் முன்வைத்தார்.
அதனை ஒரு பொருத்தமான சந்தர்ப்பமாகவே நாங்கள் உன்னிப்பாக அவதானித்;துக்கொண்டிருந்தோம். அந்த சந்திப்பில் பிரதேச செயலர் -ஆளுநர் ஆகியோரும் கலந்துகொண்டிருந்தார்கள்.
பொதுமக்களுடைய நன்மை கருதி லங்கா4 (Lanka4) ஊடகம் இச்செய்தியை பிரசுரிக்கிறது.
மேலதிக செய்திகளை வீடியோவில் அறிவதற்கு இந்த நீல நிற இணைப்பினை கிளிக் செய்யவும்



