சுதந்திர தினத்தை முன்னிட்டு கிளிநொச்சியில் முன்னெடுக்கப்படும் இரத்த தான முகாம்!
#SriLanka
#Kilinochchi
Thamilini
10 months ago
இலங்கையின் சுதந்திரத்தினத்தை முன்னிட்டு கிளிநொச்சியில் முதல் முறையாக இரத்த தானம் முகாம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இலங்கை செஞ்சிலுவை சங்கம் கிளிநொச்சி கிளை மற்றும் மாவட்ட மக்கள் சமூக நிறுவனம் இணைந்து இதனை ஏற்பாடு செய்துள்ளன.
குறித்த முகாமானது வரும் 04.02.2025 திகதி காலை 10.00 மணி தொடக்கம் மாவட்ட வைத்திய சாலையில் முன்னெடுக்கப்படவுள்ளது. இதில் அனைவரும் கலந்துகொண்டு தங்களுடைய பங்களிப்பை வழங்குமாறு ஏற்பாட்டாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

பொதுமக்களுடைய நன்மை கருதி லங்கா4 (Lanka4) ஊடகம் இச்செய்தியை பிரசுரிக்கிறது.
மேலதிக செய்திகளை வீடியோவில் அறிவதற்கு இந்த நீல நிற இணைப்பினை கிளிக் செய்யவும்