உளவு பார்த்த குற்றச்சாட்டில் பிலிப்பைன்சில் 5 சீனர்கள் கைது
#China
#Arrest
#Phillipines
Prasu
10 months ago
தென்சீனக்கடல் விவகாரத்தில் பிலிப்பைன்ஸ்-சீனா இடையே சமீப காலமாக பதற்றமான சூழல் நிலவுகிறது.
இதற்கிடையே சீனாவைச் சேர்ந்த சிலர் தங்களை தைவான் நாட்டவர்களாக கூறிக்கொண்டு பிலிப்பைன்சுக்கு சுற்றுலா சென்றிருந்தனர். ஆனால் அங்குள்ள ஸ்ப்ட்ராட்லி தீவு அருகே சூரிய சக்தியில் இயங்கும் கேமராக்களை நிறுவி அவர்கள் கண்காணித்தனர்.
பின்னர் சந்தேகத்தின்பேரில் போலீசார் அவர்களது ஆவணங்களை சோதனை செய்தபோது அவர்கள் அனைவரும் சீனாவைச் சேர்ந்தவர்கள் என்பது கண்டுபிடிக்கப்பட்டது.
இதனையடுத்து உளவு பார்த்ததாக கூறி 5 சீனர்களை பிலிப்பைன்ஸ் போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.
பொதுமக்களுடைய நன்மை கருதி லங்கா4 (Lanka4) ஊடகம் இச்செய்தியை பிரசுரிக்கிறது.
மேலதிக செய்திகளை வீடியோவில் அறிவதற்கு இந்த நீல நிற இணைப்பினை கிளிக் செய்யவும்