மாவை சேனாதிராஜாவின் பூதவுடலுக்கு நேரில் சென்று அஞ்சலி செலுத்திய ஜனாதிபதி!

#SriLanka
Mayoorikka
10 months ago
மாவை சேனாதிராஜாவின் பூதவுடலுக்கு  நேரில் சென்று அஞ்சலி செலுத்திய ஜனாதிபதி!

மறைந்த முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும், இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் மூத்த தலைவருமான மாவை சேனாதிராஜாவின் பூதவுடலுக்கு ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க இன்று (31) நேரில் அஞ்சலி செலுத்தினார்.

 இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் (ITAK) மூத்த தலைவரும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான மாவை சேனாதிராஜாவின் புகழுடல் அஞ்சலிக்காக யாழ்.மாவிட்டபுரத்தில் உள்ள அவரது இல்லத்தில் வைக்கப்பட்டுள்ளது.

 1942 ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் 27ஆம் திகதி பிறந்த மாவை சேனாதிராஜா சிகிச்சை பலனின்றி யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் தனது 82 வது வயதில் கடந்த 29ஆம் திகதி உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

 இந்நிலையில் மாவை சேனாதிராஜாவின் இறுதி கிரியைகள் எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை 02 ஆம் திகதி மாவிட்டபுரம் இல்லத்தில் காலை 08 மணிக்கு இடம்பெறும்.

 அதனைத் தொடர்ந்து 10 மணிக்கு அஞ்சலி உரைகள் அவரது இல்லத்தில் இடம்பெற்று, பின்னர் மதியம் ஒரு மணியளவில் மாவிட்டபுரம் தச்சன்காடு இந்து மயானத்தில் உடல் நல்லடக்கம் செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

பொதுமக்களுடைய நன்மை கருதி லங்கா4 (Lanka4) ஊடகம் இச்செய்தியை பிரசுரிக்கிறது.

மேலதிக செய்திகளை வீடியோவில் அறிவதற்கு இந்த நீல நிற இணைப்பினை கிளிக் செய்யவும்


உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
சிறப்பு கட்டுரை