யாழ் மாவட்ட ஒருங்கிணைப்புக் குழு கூட்டம் ஜனாதிபதி தலைமையில் ஆரம்பம்!

#SriLanka #President Anura
Mayoorikka
10 months ago
யாழ்  மாவட்ட ஒருங்கிணைப்புக் குழு கூட்டம் ஜனாதிபதி தலைமையில் ஆரம்பம்!

யாழ்ப்பாண மாவட்ட ஒருங்கிணைப்புக் குழு கூட்டம் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தலைமையில் இன்று (31) காலை 10 மணியளவில் யாழ்ப்பாண மாவட்ட செயலக கேட்போர் கூடத்தில் ஆரம்பமானது.

 யாழ்ப்பாண மாவட்டத்தில் மக்கள் எதிர்நோக்கும் பல்வேறு வகையான பிரச்சினைகள் தொடர்பில் இதன்போது ஆராயப்பட்டு வருகிறது.

 வடக்கு மாகாண ஆளுநர் நாகலிங்கம் வேதநாயகன், யாழ்ப்பாண மாவட்ட ஒருங்கிணைப்புக் குழு தலைவரும் கடற்றொழில் அமைச்சருமான இராமலிங்கம் சந்திரசேகர், பாராளுமன்ற உறுப்பினர்கள், யாழ்ப்பாண மாவட்ட செயலாளர் மருதலிங்கம் பிரதீபன், திணைக்கள தலைவர்கள், முப்படைகளின் பிரதிநிதிகள், பொலிஸ் உயர் அதிகாரிகள், பிரதேச செயலாளர்கள், துறைசார் அதிகாரிகள், என பலரும் கலந்துகொண்டனர்.

 ஜனாதிபதியின் வருகையையொட்டி யாழ்ப்பாண மாவட்ட செயலக சுற்றுவட்டப் பகுதியில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

பொதுமக்களுடைய நன்மை கருதி லங்கா4 (Lanka4) ஊடகம் இச்செய்தியை பிரசுரிக்கிறது.

மேலதிக செய்திகளை வீடியோவில் அறிவதற்கு இந்த நீல நிற இணைப்பினை கிளிக் செய்யவும்

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
சிறப்பு கட்டுரை